.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

November 9, 2010

குடிமகன்கள்- அன்றும், இன்றும்...பகுத்தறிவு பார்வை.

மனிதனின் சிந்தனைகள் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் வியப்பு தான் மேலோங்குகிறது. பெண்மையை சீரழிப்பவன், அது குறித்தே சிந்திக்கிறான். அக்கிரமக்காரன் அக்கிரமம் செய்வது குறித்தே யோசிக்கிறான். மதவாதியின் சிந்தனை மக்களை எப்படி முட்டாளாக்குவது என்பதில் உள்ளது. அயோக்கிய ஆட்சியாளர்கள் ஊழல் புரிவது குறித்தே சிந்திக்கிறார்கள். நம்மை போன்ற பகுத்தறிவாளர்களின் சிந்தனை உண்மைகளை சொல்வதில்லேயே உள்ளது.

இங்கே ஒருவரின் சிந்தனை எப்படி உள்ளது என்று பாருங்கள். இராமன் காலத்தில் டாஸ்மாக் சரக்கு எப்படியெல்லாம் விளிக்கப்பட்டது என்பதை 1954 வருஷ பரணிலிருந்து தூசி தட்டி நரகாசுரன் (விடுதலை) மலரில் தருகிறார். வாசியுங்கள். அது குறித்த நமது கருத்து தொடர்ந்து. இராமனும் குடியும்...
1. கிதை சுரா _ இது காய்ச்சி இறக்கப்படும் சாராயத்தின் பெயர்.
2.மைரேயா _ இது வாசனை யூட்டப் பட்ட பானம்; இதனை மது என்றும் கூறுவர்.
3. மத்யா...இது போதை தரும் பானம்.
4. மந்தா _ இது சாதாரண சாராயத் திலுள்ள அமித போதை தணிக் கப்பட்டது. இதற்குப் பிதா மந்தா என்றும் பெயர். போதை இருக்காது. எனவே, இதனை யாவரும் விரும்பிக் குடிப்பர்.
5. சுராபானம் _ கிதை சுராவுக்கு மாறானது; கிதை சுராபானம் செயற்கையில் செய்யப்படுவது; சுரா என்பது இயற்கைக் சாராயம். இயற்கை முறையில் வடித்தெடுக்கப்படுவது; சாதாரண மக்களின் பானம். இதைப்பற்றித்தான் புராணங்களில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
6. சிந்து _ கழிவு வெல்லப் பாகி லிருந்து வடித்தெடுக்கப்படும் பானம்.
7. சவ்வீரகா _ மட்டரகப் பானம்.
8. வரருணி _ அக்காலத்தில் உபயோகிக்கப்பட்ட மதுவகை களில் மிகவும் காட்டமானது. (போதை அதிகமானது) இந்தப் பானம். இதனைக் குடித்த அதே நொடியில் போதை உண் டாகித் தள்ளாடி விழச்செய்து விடுமாம்._

டில்லியிருந்து வெளிவரும் ‘CARAVAN’ என்ற ஆங்கில ஏட்டின் 15.8.54 இதழில் இராமாயணத்தில் மதுக்குடி என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.என். வியாஸ் எழுதிய கட்டுரையில் இருந்து. ரெம்பத்தான் மெனக்கெட்டு இருக்கிறார்- தகவலை சேகரிக்க கட்டுரையாளர்.

 இதை வெளியிட்டதன் நோக்கம் என்ன. இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1. இராமன் காலத்தில் குடி இருந்தது என்று சொல்ல. 2. சிலாகித்து எழுதியுள்ளதை
பார்க்கும் போது, இதை எழுதியுள்ள நபரின் குடி ரசனையை நாம் உணர முடிகிறது. ஒரு பகுத்தறிவாளனாய் இரண்டாவது சொல்லப்பட்ட காரணத்தை, நாம் தூக்கி எறிகிறோம். அது நமக்கு தேவையற்றது. முதல் காரணத்தை எடுத்து கொள்வோம். இராமன் காலத்திலும் குடி இருந்தது என்று அறிய முடிகிறது.

யாராவது, "இந்த காலத்துல குடிச்சே நாசமா போறானுங்க" என்று சொன்னால், "இராமயண காலத்துலயே குடி இருந்து இருக்கு" என்று ஆட்சியாளர்களின் ஆதரவு பகுத்தறிவாளர்கள் மேற்கோள் காட்டலாமே. நல்லது. இராமன் காலத்திலும் குடிகாரர்கள் இருந்தார்கள் என்பதை நரகாசுரன் (விடுதலை) இதழ் வலியுறுத்த முனைகிறது. மகிழ்ச்சி. இந்த காலத்தில் குடி இல்லை என்ற ஒரு நிலை இருந்தால், நாம் இராமன் காலத்து குடியை பற்றி பேசலாம். அன்று குடிக்கு எட்டு பெயர் என்றால் இன்று எண்பது பெயர்கள். சரக்கு, சாராயம், கள்ளு, இஞ்சி என்று பெயர்கள் நீளும்.

இன்று சராசரியாக பதிமூன்று வயதிலேயே ஒருவன் (சிறுவன்) குடிக்கிறான் என்றொரு ஆய்வறிக்கை சொல்கிறது. இருபத்தியொரு வயதில் பூரணமாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறான் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. விவாகரத்து கோரும் பெரும்பாலான தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது குடிப் பழக்கம் என்கிறார்கள். சாலை விபத்துகளுக்கு பெருமளவு காரணமாக இருப்பது குடிப்பழக்கமே.

மனிதனின் சகல துயரங்களுக்கும், பெரும்பாலான தீயச் செயல்களுக்கும் காரணமாக இருப்பது குடி பழக்கமே. இதிலுள்ள ஒரே ஆதாயம் என்றால் அரசாங்கத்திற்கு கிடைக்கின்ற வருமானம். அவ்வளவே, ஆக மொத்த தமிழர்களின் வாழ்க்கையோடு விளையாடும் குடியை எதிர்க்க துப்பில்லாத பகுத்தறிவாளர்கள், மக்களின் அவலத்தை கண்டும் காணாமல் போகின்ற மனம் படைத்த பகுத்தறிவாளர்கள், தமக்கு முன்னுள்ள கடமையை மறந்து

இராமயண காலத்தில் குடி பழக்கம் இருந்தது என்று சொல்ல வருவதா பகுத்தறிவின் வேலை. ராமன் காலத்தில் குடி இருந்தால்- அதனால் நமக்கென்ன வந்தது. இன்று ஒரு குரூரத்தின் பின்னால் மக்கள் கூட்டம் சிக்குண்டதை கூட உணராமல் பகுத்தறிவாளர்கள் இருப்பது வெட்கக்கேடான விஷயம்.
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. ஆதித்யன்November 9, 2010 at 1:46 PM

    பகுத்தறிவாளர்களால் பதில் சொல்ல முடியுமா என்ன.

    ReplyDelete
  2. உண்மை பேசுகிறதுNovember 9, 2010 at 4:03 PM

    தமிழகத்தில் கல்வி அறிவு பெறாதவர்கள் கூட இருக்கலாம்... ஆனா குடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்று அரசு நினைக்குது போலும்.

    ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails