.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

December 1, 2010

கருஞ்சட்டையாளருக்கு சில கேள்விகள்-1

கருஞ்சட்டையாளர் பேராசிரியர் சுப.விரபாண்டியன் அவர்களின் "வடநாட்டுச் சுரண்டல் தடுப்புப் போர் 1950 அக்டோபர் 16 " என்று பதிந்த கட்டுரையை கீற்று தளத்தில் வாசிக்க நேர்ந்தது. அதிலிருந்து சில பகுதிகளை தந்து விட்டு, பிறகு கருஞ்சட்டையாளருக்கு சில கேள்விகளை முன் வைக்கலாம் என்று நினைக்கிறோம்.

அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.

‘வடநாட்டுச் சுரண்டல் தடுப்புப் போர்’ என்னும் பெயரில், பார்ப்பன - பனியா எதிர்ப்புப் போரைத் தந்தை பெரியார் தொடங்கினார். மார்வாரிகள் தமிழ்நாட்டின் பொருளாதார வளத்தைச் சுரண்டுவதைத் தடுப்போம் என்பது முதன்மையான முழக்கமாக இருந்தது.

சென்னை ஆரியபவன் சிற்றுண்டிச்சாலை, செல்லாராம் துணிக்கடை ஆகியனவற்றின் முன், அன்று மாலை மறியல் தொடங்கியது. அது ஒரு வேறுபட்ட போராட்டம். ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு போராடுவதில்லை. தினந்தோறும் எட்டு அல்லது பத்துப்பேர் மட்டும், கடைவாசலில் கைகூப்பி நின்றபடி, மார்வாரி கடைகளைப் புறக்கணியுங்கள் என்று அக்கடைக்கு வரும் மக்களைக் கேட்டுக் கொள்வதும், துண்டறிக்கைகள் கொடுப்பதும். அவ்வளவுதான்.

முதலில் ‘இது ஒரு பெரிய போராட்டமா?’ என்றுதான் மார்வாரிகள் கருதினர். ஆனால் இப்போராட்டம் மாதக் கணக்கில் தொடர்ந்து நடந்தபோது. அதன் பாதிப்பை அவர்கள் உணர்ந்தனர். மார்வாரிகள், காவல்நிலையம் சென்றனர். மறியல் செய்பவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றனர். யாரையும் கைநீட்டி மறிக்கவில்லை. குறுக்கே படுத்துத் தடுக்கவில்லை. வெறுமனே, கைகூப்பி வேண்டுகோள் விடுத்தனர்.

ஒவ்வொரு நாளும் இதே நிகழ்வுகள் அரங்கேறின. மாலை 5 மணியானால், தொண்டர்கள் கடை வாசலுக்கு வந்துவிடுவர். காவல்துறை 6 மணிக்கு வந்து கைது செய்யும். 9 மணிக்கு விட்டுவிடும். பார்ப்பனர்களாலும், மார்வாரிகளாலும் இதனைச் சகிக்க முடியவில்லை. ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று உள்ளுக்குள் உறுமினார்கள். ‘இது என்ன பைத்தியக்காரத்தனம்’ என்று எழுதியது ஆனந்தவிகடன்.

 பத்துப் பேருக்கு மேல், ஒரே நாளில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடுப்பது பெரும்பாடாகி விட்டது. வேறு வழியின்றி, முதல் 10 பேர் கைதானவுடன், அடுத்த 10 பேர் களத்திற்கு வந்தனர். அலை அலையாகத் தோழர்கள், ஆண்களும், பெண்களுமாய் வந்தபடி இருந்தனர்". என்று அவரின் கட்டுரை நீள்கிறது.

அதை வாசித்து முடித்ததும் - நம் மனதில் சில கேள்விகள் எழுந்தன. வழக்கம் போல் கருஞ்சட்டையாளர்கள், அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போய் விடுவார்கள் என்று நம்புகிறேன். ஏன் எதற்கெடுத்தாலும் தந்தை பெரியார் செய்த போராட்டம் குறித்தே சொல்லுகிறிர்கள். இன்று நீங்கள் அதே தமிழனை சுரண்டும் மார்வாடிக்கு எதிராக என்ன போராட்டம் நிகழ்த்தினீர்கள் என்று சொல்லுங்கள். இன்று மார்வாடிகள் எல்லாம் தமிழ்நாட்டை விட்டு ஓடி போய் விட்டதாக கருதுகிறிர்களா... அல்லது தமிழர்களை சுரண்டவில்லை என்று நினைக்கிறிர்களா.

அன்று பத்து கடைகள் தான் மார்வாடிக்கு. இன்று ஆயிரக்கணக்கான கடைகள். சுரண்டல் என்பது அன்றை விட இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு கருஞ்சட்டையாளர்களே நீங்கள் என்ன செய்தீர்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். என்ன செய்ய போகிறிர்கள். மூன்றுக்கும் ஒரே பதில். எதுவும் செய்ய போவதில்லை என்பது தாம். வாய் சொல்லில் நாம் வீரர்கள். ஒரு மார்வாடி சொந்தமாக கட்டிய வீட்டில் ஒரு தமிழனுக்கு வாடகைக்கு விட மாட்டான். அன்று மார்வாடி மட்டும் தமிழன் வளத்தை சுரண்டினான். இன்று மலையாளியில் இருந்து சகல மாநிலத்தவரும்தமிழனை சுரண்டுகிறான். போதாக்குறைக்கு டாஸ்மாக் சரக்கு கொடுத்து அரசும் சுரண்டுகிறது. 

முன்பெல்லாம் ஒரு செய்தியை நிறைய பார்க்கலாம். தங்க நகை தொழிலாளர்கள் தற்கொலை என்று. என்ன காரணம் எனில் மலையாள ஆலுக்காஸும், மார்வாடி மற்றும் பெங்காலிகளினால். இப்போது யாரும் தற்கொலை செய்வதில்லை. காரணம் - தங்க நகை தயாரிப்பு வணிகத்தை அவர்கள் தமிழர்களிடம் இருந்து முழுமையாக அபகரித்து கொண்டார்கள். ஆலுக்காஸு முன்பு கருஞ்சட்டையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், பல ஏழை நகை தொழிலாளர்கள் உண்மையிலேயே பிழைக்கலாம்.

ஆனால் நீங்கள் செய்யமாட்டீர்கள். ஆட்சியாளர்கள் கோபித்து கொண்டால். காஷ்மீரிகளுக்கு குரல் கொடுப்போம். சொந்த சகோதரனுக்கு குரல் கொடுக்க மாட்டோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், தமிழர்களை சுரண்டும் பல தொழில்களில் ஒன்றை மட்டுமே
 சொல்லியுள்ளோம். ஒவ்வொன்றையும் சொல்ல துவங்கினால், ரத்தக்கண்ணீர்  வடிக்க வேண்டி வரும்.

இன்றைய சூழலுக்கு தகுந்து போராட முடிந்தால் போராடுங்கள் இல்லையென்றால் பேசாதீர்கள். பெரியார் போராட்டத்தை பேசி, உங்கள் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள். பெரியார் துவங்கிய வேலை முடியவில்லை என்பதை விட, அந்த பணி கடுமையாகி இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

 1. தென்றல்December 1, 2010 at 12:27 PM

  உண்மையை உண்மையாக சொல்லி இருக்கிறிர்கள். பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 2. தாய் தமிழகம், ஈழ தமிழகம் - இரண்டு தமிழர்களின் வாழ்க்கையையும் பார்த்தால் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது.

  ReplyDelete
 3. உண்மையை உண்மையாக சொல்லி இருக்கிறிர்கள். பதிவுக்கு நன்றி

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails