.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

April 5, 2011

குடிகாரன் பேசுகிறேன் -​கலைஞரும், குடிகாரர்களும்...

 விஜய்காந்தை குடிகாரர் என்றும், வடிவேலுவை குடிகாரன் என்றும் மாறி மாறி - இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியும், பழித்து இழித்து பேசி வருகிறார்கள்."மொத்த தமிழ்நாட்டையும் குடிகார நாடாக்கிட்டு" பேசுறாங்கய்யா பேச்சு

"குடிகாரர்கள் என்றால் உங்கள் அனைவருக்கும் கேவலமாக போய்விட்டதா. அரசாங்கத்திற்கு வருஷத்திற்கு 15,000 கோடி வருமானம் கிடைக்க காரணமாக இருப்பவர்களை பழிப்பதா, கடையை திறந்து வைத்து விட்டு குடிப்பவப்பவர்களை அவமதிப்பதா, குடிப்பதை நிறுத்திவிட்டால் - இந்த அரசு வருமானத்துக்கு பிச்சை தான் எடுக்க வேண்டும், குடிகாரர்களாக இருப்பதில் தவறில்லை, குடியை கெடுக்கும் அரசியல்வாதியாக இருப்பது தான் தவறு" என்கிறார் கு(டிப்போர்).மு(ன்னேற்ற).க(ழகத்) நிறுவனர் வட்டசெயலாளர் வண்டு முருகேசன்.

தமிழகத்தில் குடி பரம்பரை உருவான வரலாற்றை சொல்கிறார். கேளுங்கள் "70களுக்கு பிறகு யார் குடிக்க பழகி இருந்தாலும்- அந்த பெருமை முழுக்க முழுக்க கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆரையே சாரும். ஒரு வேளை விஜய்காந்த் குடிபழக்கத்தை நாடியவராக இருந்தால் அவரையும் குடிகாரராக்கிய பெருமை கூட இந்த இருவரையே சாரும். குடியை மறந்திருந்த இரண்டு தலைமுறைக்கு பிறகு, குடியை தமிழகத்திற்கு பெருமையுடன் அறிமுகப்படுத்தியவர் கலைஞரே.

கவிதை எழுதுவதிலும், கடிதம் எழுதுவதிலும் வல்லவரான கலைஞர குடிப்பவருக்காகவும் கவிதை எழுதினார். பிறப்புக்கு, இறப்புக்கு, திருமணத்துக்கு என்று கவிதை எழுதுவது இயல்பு. கலைஞர் ஒருவர் தான் சாராயக்கடையை திறந்ததற்கும் கவிதை எழுதினார்.

1971ல் சாராயக்கடையை திறப்பதென்று கலைஞர் முடிவு செய்ததும் ஆரிய ராசாசி அதை எதிர்த்தார். சாராயக்கடைகளை திறந்ததும் அதற்கு கண்டனம் தெரிவித்து கல்கி வார இதழில் கவிதை எழுதினார் ராசாசி. விடுவாரா திராவிட க(லை)விஞர். பொங்கி எழுந்து எழுதினார் சாராய கடையை வரவேற்று, ஏழை பாழைகளுக்காக, தான் சாராய கடையை திறப்பதற்கான காரணத்தை அழகாக விளக்கி கவிதை எழுதினார் இப்படி...

"சாராய சகாப்தமென்று ஒரு கவிதை...
சக்ரவர்த்தி ராஜாஜி மாமுனிவர்-
தாராளமாய் கல்கி ஏட்டில் தீட்டியதால்,
யார் யாரோ சுதந்தராக்கள் மகிழ்கின்றார்...
பார்பாராய் குடித்தவர்கள் -பர்மிட் வாங்கி
நேர்மாறாய் பேசுகின்றார் புத்தர் போல...

இதயத்தில் நோய் என்றும்
இரு யூனிட் வேண்டுமென்றும்-
இதோ டாக்டர் சர்டிபிகேட் பாருமென்றும்
இங்கிருக்கும் சுதந்தராக்கள் குடித்த கதை ஊர் அறியும்.

பணக்காரர் பகல் வேடக்காரரெல்லாம்
மணக்கும்மது வாங்குவதற்கு பர்மிட் வேண்டும்
பகட்டுக்கு ஒரு நீதி பாவம் ஏழைக்கு ஒரு நீதி

பஞ்சாங்க சாத்திரத்தின் புதுநீதி
வாடுகின்ற ஏழை குடிகாரன் வார்னிஷை
குடித்து செத்த போதும்தனம்
மேவுகின்ற விஸ்கி,ரம் அடித்தபோதும்
நவரோஜி வீதியில் தான் நாற்றம்
துளைக்கலையோ நாடு தான் பார்க்கலையோ

ஆழ்ந்த அறிஞர் அண்ணா என்று
அன்பர் ராசாசி இன்றெழுதப் பார்த்து
தான் அயர்ந்து போனேன் அய்யா


இன்னொரு நாள் அண்ணாவை பற்றி
அரசாங்க பாட நூல் வந்தபோது
அற்பவயதில் செத்தவெரல்லாம்
அவதாரப்பருடர் தாமோ என எழுதி
அவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தாபோகும்

ஒரிசாவில் இவர்கட்சி ஆட்சியிலே
ஓடிற்றே மதுவின் வெள்ளம் அப்போது
தரிசாக போனது ஏன் இவரின் உள்ளம்
 வரம் பெற்ற கருணை செல்வா
என எனைக் வாழ்த்துகின்றார் வணங்குகின்றேன்

வரம் தந்தார் இவரல்ல,
நேசக் கரம் தந்த நாட்டு
மக்கள் வரம் பெற்றேன்
பெரியார், அண்ணா தந்த நெஞ்ச உரம் பெற்றேன்

இப்போதும் சொல்கின்றேன் கேட்டிடுக

இந்தியா முழுமைக்கும் அறவே மதுவிலக்கு
கொண்டு வர சட்டம் செய்தால்
சிரம் தாழ்த்தி கரம் குவித்து சிறப்பான செயல்
என்று போற்றி நின்று செயலாக்க முந்திடுவேன் அதன் பிறகும்

இதய நோய் என்று சில் இருட்டினிலே
குடிப்பதையும் இனி அனுமதிப்பதில்லை
என்று விதி செய்வேன் முழு விவரம்
தேவையெனில் பட்டியல் பிறகு சொல்வேன்."

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் - இந்த கவிதையை தந்தை பெரியார் முன்னால் கலைஞர் வாசித்தது தான். தமிழர்களின் வாழ்க்கையை சூறையாடியதில் எல்லா பெருந்தலைகளுக்கும் பங்கிருந்திருக்கிறது போலும். "பெரியார், அண்ணா தந்த நெஞ்ச உரம் பெற்றேன்
" என்று கவிதை வேறு. ஆக பாடம் நடத்தி நெஞ்சு உரம் தந்தவரும் சரியில்லை. பாடம் படித்தவரும் சரியில்லை.

ஆரிய ராசாசி குடியை எதிர்த்தார் என்பதற்காக திராவிட கலைஞர் வீம்பாக மதுவை ஆதரித்தாரா. இந்த கவிதை பெரிய அசிங்கத்தையும் தாங்கி உள்ளது. "பணக்காரன் குடிக்கலாம்... ஏழை குடிக்க கூடாதா..." என்று குடிக்கு வக்காலத்து வாங்குகிறது. குடிக்கின்றவனை தட்டிக் கேட்க முடியாமல், தடுக்க சட்டமியற்றாமல் மேலும் மேலும் குடிகாரர்ளை உருவாக்கியது தான் கலைஞரின் சாதனை.

ஏழைகளுக்காக சாராயக்கடையை திறக்கிறேன் என்று கடையை திறந்து, இன்று பள்ளி சிறுவர்கள் முதற்கொண்டு குடிக்கு அடிமையாகி, இன்று குறிப்பிட்ட சதவித அளவுக்கு பெண்களும் போதையில் விழ காரணமாகி விட்டீர்கள்.குடிப்போர்களை பார்த்து "தைரியமாக சொல்... நீ மனிதன் தானா - இல்லை மிருகம்" என்று மதுவிலக்கு பிரச்சாரம் செய்த எம்.ஜி.ஆரும் பின்னாளில் கலைஞருக்கு சளைக்காமல் குடிமகன்களை உருவாக்க பாடுபட்டார்.

"குடிகாரர்களாக இருப்பதில் தவறில்லை, குடியை கொடுத்து குடியை கெடுக்கும் அரசியல்வாதியாக இருப்பது தான் தவறு" என்கிறார் கு.மு.க நிறுவனர். நாங்கள் திருந்த வாய்ப்புள்ளது. நீங்கள் திருந்த வாய்ப்புள்ளதா" என்றும் கேட்கிறார்

.புகைப்படம் ; எங்கே செல்லும் இந்த பாதை கே.ஆர்.பி. செந்தில் வலைப்பக்கத்திலிருந்து.
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. நீங்க வேற பாஸ் !!! டாஸ்மாக்கில் நின்றுக் கொண்டு ஒரு கட்டிங்க் போட்டு தமிழக கஜானவை நிரப்பிவிட்டு, தேர்தலில் ஓட்டுப் போட ஐநூறு கிடைக்காதா என நாக்குத் தொங்கப் போட்டு, கிடைக்காத கோவத்தில் தேர்தலைப் புறக்கணிக்கும் நாம் தான குடி ( கார ) மக்கள் .............

    ReplyDelete
  2. நன்றி இக்பால் செல்வன் கருத்துரைக்கு.

    ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails