"தினமணி' நாளிதழின் புதுதில்லி பதிப்புத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தினமணி புதுதில்லி பதிப்பின் முதல் பிரதியை வெளியிட்டவர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி. இரண்டு நேர்மைகளின் சங்கமமாக - அந்த விழாவை பார்த்தார்கள் நேர்மை பெருமக்கள். ஆனால் அதையும் கீழ்த்தரமாக, உள்நோக்கத்தோடு, குதர்க்கமாய் பார்த்து எழுதினார்கள் கழ(ல)க சகுனிகள்.
இது குறித்து முரசொலியில் இப்படி செய்தி வெளியிட்டிருந்தார்கள் (பார்க்க : இங்கேயும்) முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், "நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க. அணி வெற்றி பெற அரும்பாடு பட்ட தமிழ் நாளேடு தினமணி. அந்தத் தினமணியின் டெல்லிப் பதிப்பு 3ம் தேதி தொடங்குகிறது.
தொடங்கி வைப்பவர் யார் தெரியுமா ?. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அவர்கள் தான். அ.தி.மு.கவின் ஆதரவு ஏடான தினமணி டெல்லிப் பதிப்பை தொடங்கி வைக்கிறார். அப்படி எனறால், தினமணிக்கும் டெல்லி தேர்தல் ஆணையருக்கும் என்ன தொடர்பு?. அவர் எப்படி இந்த விழாவில்?, கணக்கு எங்கேயோ இடிக்கிறதா?, ஏதாவது புரிகிறதா?, புரிந்தால் சரி!" என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையமும், தேர்தல் ஆணையரும் தம் கடமையை செய்தார்கள். தினமணி, ஒரு ஊடகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது. அவர்களின் சந்திப்பை அசிங்கமான முடிச்சால் இணைக்கிறார்கள். ஊழல் பெருச்சாளிகளை, அந்த விழாவில் கலந்து கொள்ள செய்திருந்தால் உச்சி குளிர்ந்திருப்பார்கள் போலும்.
நடுநிலையில் - பல ஊடகங்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறது தினமணி என்று சொன்னால் மிகையில்லை. புதியதாக பத்திரிகை துறைக்கு வருபவர்கள் கொஞ்ச காலமாவது தினமணியில் பணிபுரிய வேண்டும். நேர்மை, நடுநிலை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். விபச்சாரம், கள்ளக்காதல் மற்றும் படுகொலை செய்திகளை மாத்திரம் போட்டு பக்கங்களை நிரப்பும் செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், தினமணி இன்று தொலைதொடர்பு துறை ஊழலை வெளிக் கொணர்வதில் பெரும் சேவை புரிந்துள்ளது.
அது பொறுக்குமா அரசியல்வியாதிகளுக்கு. நாளை அ.தி.மு.க அரசு இதே மாதிரி முறைகேடு செய்தால், தினமணி போன்ற ஊடகங்களிடம் இருந்து தப்ப முடியாது. அதை ஒரு கட்சி சார்புக்குள் அடக்குவது, தங்கள் தவறுகளை மறைக்க விரும்புபவர்களின் வேலை . தினமணியின் நடுநிலை நிரம்பிய நேர்மையை மனதில் கொண்டு தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோஷி துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வெளிவரும் "தினமணி" நாளிதழின் புதுதில்லி பதிப்பை வெளியிடுவதில் நான் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோது சிறிதும் தயங்காமல் இசைவு தந்தேன். காரணம், செய்திகளை ஒருசார்புத் தன்மை இல்லாமல் துணிந்து வெளியிடுவதில் எக்ஸ்பிரஸ் குழும இதழ்கள் சிறந்து விளங்குகிறது" என்றவர் மேலும் சொன்னார். "
தேர்தலின்போது ஊடகத்தின் உதவி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஊடகத்தில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் விதிமீறல்கள் புகாராக எடுத்துக்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன." என்றார். ஆக, பத்திரிகை செய்தியை அடிப்படையாக கொண்டு, குற்றச்சாட்டு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால் - அந்த பத்திரிகை எந்தளவு நேர்மையாக உழைத்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
சந்தடி சாக்கில் ஒரு கரும்புள்ளி வைக்க முயல்கிறார்கள் கலகத்தவர்கள். " தினமணிக்கும் டெல்லி தேர்தல் ஆணையருக்கும் என்ன தொடர்பு?.
அவர் எப்படி இந்த விழாவில்?, கணக்கு எங்கேயோ இடிக்கிறதா?, ஏதாவது புரிகிறதா?, புரிந்தால் சரி!" என்கிறார்கள்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். எத்தர்களின் பார்வைக்கு எல்லோருமே எத்தர்களாக தான் தெரிவார்கள் போலும். சொத்து விபரம் காட்ட சொன்னால் நீதியரசர்களும் "முடியாது. போ" என்று அடம் பிடிக்கிறார்கள். வேட்பாளர்களோ, தேர்தல் ஆணையத்தின் நிர்ப்பந்தத்தினாலேயே சொத்து விபரம் வெளியிடுகிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையர்களோ, யாரின் அறிவுறுத்தலுமின்றி சொத்து விபரங்களை தாமாகவே வெளியிட்டு இருக்கிறார்கள்.
இது தான் எஸ்.ஒய். குரோஷியின் சொத்துகள். "ஆக்ரா, கிரேட்டர் நோய்டா, குர்காவ்னில் 3 இடங்கள் உள்ளன. 1980ம் ஆண்டில் குர்காவ்ன் நகரில் இவர் ரூ.63,089க்கு வாங்கிய நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ 1.75 கோடியாகும். 2006ம் ஆண்டு அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது கிடைத்த ரிடையர்மெண்ட் பெனிபிட் பணம், பி.எப் பணம், வங்கி கடன் ஆகியவை மூலம் நோய்டாவில் ரூ.36 லட்சத்துக்கு நிலம் வாங்கி உள்ளார். தனது சேமிப்பின் மூலம் ஆக்ராவில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நிலம் வாங்கியுள்ளார்"...ஆக, எங்கும் நேர்மை நிரம்பி இருந்தால் தான், அச்சப்படாமல் அரசியல்வாதிகளுக்குடன் வேலைகளை செய்ய முடியும். அதுவே டெல்லி குரோஷி முதல் மதுரை சகாயம், திருச்சி சங்கீதா வரை நடந்தது. தாம் தோற்றதற்கு காரணமான (ஊழல், வாரிசு அரசியல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு) பற்றி ஆராயாமல், பார்ப்பன ஊடகங்களை காறி உமிழ்ந்தும், தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதும் - தோல்வியால் எந்த பாடமும் கற்று கொள்ளவில்லை அவர்கள் என்பதையே உணர்த்துகிறது.


தினமணி நடுநிலமையான பத்திரிகை என்பதற்குஇந்த கார்டூன் தான் சாட்சி.ஆக நீங்கள் யார் என்பதை புரிய வைத்து விட்டீர்கள்.http://dinamani.com/edition/photoonStory.aspx?&SectionName=Cartoon&artid=427831&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D!%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D!
ReplyDelete