.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

August 5, 2011

ஏன்? எதற்கு? எப்படி? 250வது பதிவு.

இது எனது 250வது பதிவு. என் வலைப்பூவிற்கு வந்து, இது வரை என்னை ஆதரித்த ஒரு லட்சத்தி பத்தாயிரம் பேருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.வலைப்பூ துவங்கிய அனைவருக்கும் ஒரு மலரும் நினைவுகள் இருக்கும். நண்பர்களை பார்த்து அல்லது எழுதும் ஆசையினால் என்று ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் - வலைப்பூ துவங்க. அது போல எனக்கும் ஒரு மலரும் நினைவு உள்ளது. நான் முதலில் வலைப்பூ வாசிப்பாளனாக தான் இருந்தேன். வாசித்ததில் ஒன்று புரிந்தது.

அரசியல் கட்டுரை எழுதுபவர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள், மத சார்ப்பு குறித்து வாய் வலிக்க பேசுபவர்கள் உட்பட - அனைவரும் நடுநிலையுடன் எழுதுகிறார்கள் என்பதை விட, அவருக்கு தெரிந்த நியாயங்களை (உண்மையில் அவை நியாயங்களாக இருப்பதில்லை) தான் சொன்னார்கள்.

பகுத்தறிவாளர்கள் - அரைகுறை பகுத்தறிவாளர்களாக தான் இருந்தார்கள். நவீன பார்ப்பனர்களாய் வர்ணம் பார்த்து நியாயம் சொன்னார்கள். பல முற்போக்காளர்களின் எழுத்து பிற்போக்காக, சிறுபிள்ளைத்தனமாக தான் இருந்தது. ஏதேனும் ஒரு மதத்தினை கட்டி கொண்டு மதச் சார்ப்பின்மையை பற்றி வலியுறுத்தி பேசினார்கள். வாசிப்பாளர்கள் அனைவருக்கும், இந்த உண்மை புரியாமல் இருக்காது. சரி அரைகுறையாக, அரை வேக்காடாக எழுதுவது அவர்கள் உரிமை. மறுப்பதற்கில்லை.

ஆனால் அவர்கள் யாரோ ஒருவரை, ஒரு இயக்கத்தை விமர்சித்து தான் எழுதுகிறார்கள். எழுதி முடித்த கடைசி வரி நியாயத்தை உரைப்பதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த யாரோ ஒருவன் செய்த தவறையே - இவர்கள் பங்குக்கு, தங்கள் விமர்சனத்தின் மூலம் திரும்ப செய்கிறார்கள். சரி. இவர்களின் தவறான விமர்சனத்தை, இவர்களின் நடுநிலையற்ற தன்மையை யார் விமர்சிப்பது. அவர்களின் கருத்துக்கு மாற்று கருத்து இருப்பின் - அதை நாம் வைக்கவில்லை என்றால், அவர்கள் சொல்லும் பொய்யே உண்மையானதாக ஆகி விடாதா?

அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்க பின்னூட்டம் போதுமானது தான். பின்னூட்டத்துடன் தான், நான் எழுதுவது துவங்கியது. கூகுள் கணக்கு வேண்டி இருந்தது. துவங்கியாயிற்று. ஆனால் பல பகுத்தறிவாளர்கள், பல முற்போக்காளர்கள் நம் பின்னூட்டங்களை வெளியிடவே அச்சப்பட்டார்கள். அதனால் வேறு வழி இல்லாமல் வலைப்பூ துவங்கி விட்டேன். பின்னூட்டத்திற்காக ஒற்றை வரியில் எழுதுவதை, வலைப்பூவுக்காக ஒரு பக்கத்திற்கு எழுத வேண்டியது தானே.

வலைப்பூ குறித்து பெரிய அறிதல் இல்லை. பிளாக்கர் டிப்ஸ் தரும் பல வலைப்பதிவர்கள் பதிவை படித்து, ஒரு வழியாக வலைப்பூ துவங்கி விட்டேன். அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். FOLLOWERS விட்ஜெட்டை இணைக்க தான் ஆறு மாசமானது.

 பெரியார் தாசன் தான் நான். ஆனால் ஏனைய பெரியார் தொண்டர்களை போல கிளிப்பிள்ளையாக இருக்க முடியவில்லை. அவர்களை போல காப்பி, பேஸ்ட் பதிவராகவும் இருக்க முடியவில்லை. "சில விஷயங்கள் சரியாக இருப்பதால் - எல்லா விஷயங்களும் சரியாக தான் இருக்க வேண்டுமா என்ன". எதையும் பரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் என்கிற வார்த்தையை தவிர, மற்ற எல்லாம் மாறக்கூடியது தானே.

பெரியார்தாசனாக இருந்தும் - எனது சில பதிவுகளை வைத்து, பல்வேறு அடையாளம் தந்து - அசிங்கமான பின்னூட்டமும் வந்து இருக்கிறது. அதனால் எந்த வருத்தமும் இல்லை. என்னை அருவருக்க ரீதியில் திட்டி வரும் பின்னூட்டங்களை கூட வெளியிட்டு இருக்கிறேன், ஆனால் தலைவர்களை கேவலமாக, அருவருக்க ரீதியில் வரும் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை.

தலைவர்களின் தவறுகளை விமர்சிப்பதில் நியாயம் உள்ளது. அது விமர்சகரின் கடமையும் கூட. ஆனால் அந்த தவறுகளை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று தலைவர்களை கேவலமாய், தரக்குறைவாய் அர்ஜிப்பதில் என்ன நியாயம் உள்ளது. பிற பகுத்தறிவாளர்கள் தளத்துக்கும், என் தளத்துக்குமுள்ள மிக பெரிய வித்தியாசம் - நாகரீகமாக எழுதுதல்.

அவன், இவன் என்கிற ஏக வசனம் நம் பதிவில் இருக்கவே இருக்காது. பதிவில் இருக்கிற நாகரீகம், பின்னூட்டத்திலும் இருக்க வேண்டும் என்று கருதுகிறவன். இந்த இடத்தில், இதுவரை - கண்டனத்துக்குரிய, கெட்ட வார்த்தைகளினால் வெளியிடப்படாத பின்னூட்டங்கள் தந்தவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பிறர் எழுதாதவற்றையே நான் எழுதுகிறேன். எழுதியவரை உண்மையும், திருப்தியும், நாகரீகமும் உள்ளது. தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்.
தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

 1. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்...நான் 25 க்கே கொண்டாடலாம்னு நினைச்சேன்...அப்ப நீங்கல்லாம் எனக்கு தாத்தா மாதிரி...

  உங்கள் வலைப்பயணம் தொடர மறுபடியும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. congrats bro! carry on ur good work!

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails