முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கைதான செய்தி விறுவிறுப்பு இணையம் பரபரப்பாக வெளியிட்டுள்ளது. அங்கே வாசிக்க தவறியவர்களுக்காக. இம்மாதிரியானவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்காக தான் கலைஞர் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படுகிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருச்சியைக் கலக்கிவந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் திங்கட்கிழமை காலை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேரு எட்டடி பாய்ந்தால், இவர் பதினாறு அடி பாய்ந்ததுதான், திருச்சியில் தி.மு.க.வினருக்கு ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் என்று கட்சிக்காரர்களே கூறும் அளவுக்கு பிரபலமானவர் இவர்.திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்ட நிலம் மிரட்டப்பட்டு பறிக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீஸாரால் தேடப்பட்டு வந்தார் ராமஜெயம். நேரு உட்பட மற்றைய முக்கியஸ்தர்களும் கைது செய்யப்பட்டபோது, இவர் சிக்கவில்லை. முதலில் ராமஜெயம் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்பட்ட கதை, சில மணி நேரங்களிலேயே ஆள், வெளிநாட்டில் இருப்பதால் கைதாகாமல் தப்பித்தார் என்பதாக மாற்றப்பட்டு ஊடகங்களில் அடிபட்டது.
திருச்சி காவல்துறையும், இவர் இந்தியா வந்தவுடன் கைது செய்யப்படுவார் என்று சீரியசாக கூறியிருந்தனர்.
இந்த வெளிநாட்டு கதையே அவரால் பரப்பி விடப்பட்ட கதைதான் என்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. குளித்தலைக்குப் பக்கத்தில் ஒரு பண்ணை வீட்டில் அவர் தங்கியிருப்பது அவருக்கு நெருக்கமான காவல் துறையினரின் அட்வைஸில்தான் என்பதாகவும் ஒரு கதை திருச்சியில் அடிபட்டுக் கொண்டிருந்தது.,
நேற்று காலை ராமஜெயம் கைது செய்யப்பட்டது, வெளிநாடு செல்ல விமானத்தில் ஏற முயன்றபோது! அதாவது, வெளிநாட்டில் இருப்பதால் கைது செய்ய முடியவில்லை என்று கூறப்பட்ட நபர், வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றபோதுதான் கைது செய்யப்பட்டுள்ளார். அப்படியானால், அண்ணன் வெளிநாட்டில் இருக்கவில்லையா?
இல்லை என்பதே எமக்குக் கிடைத்த தகவல்.
நாம் விசாரித்த சோர்ஸ்கள், முன்பு அவர் வெளிநாடு சென்றது உண்மை.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அவரது முதலீடுகள் உள்ளன. ஆனால், நேரு கைது செய்யப்படும் முன்னரே இந்தியா திரும்பி விட்டார் என்கின்றார்கள். நேரு கைது செய்யப்பட்டபின், ராமஜெயம் தேடப்படுகிறார் என்று போலிஸ் அறிவித்தபோது, அவர் திருச்சிக்கு அருகில்தான் இருந்தார் என்கிறார்கள் அவர்கள்.
அடுத்து தானும் கைது செய்யப்படுவோம் என்று தெரியவந்த உடனே வெளிநாட்டுக்கு பறந்துவிடும் முடிவை அவர் எடுத்தார் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும்போது அகப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் வெளிநாட்டு முயற்சியை ஒத்தி வைத்துவிட்டு, வெளிநாட்டில் இன்னமும் இருக்கிறார் என்ற கதையை அவரே பரப்பி விட்டார் என்கிறார்கள்.அந்தக் கதை நன்றாகவே பற்றிக் கொண்டது.
ராமஜெயம், வெளிநாட்டில்தான் இருக்கிறார் என்பது நன்றாக எஸ்டாபிளிஷ்
ஆகிவிட்டால், அதன்பிறகு இந்தியாவில் அவரை யாரும் தேட மாட்டார்கள் என்பது ஒரு பிளஸ் பாயின்ட். அடுத்தது, ஏற்கனவே வெளிநாட்டில் இருக்கும் ஒருவர், இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல முயற்சிக்க முடியாது என்பதால், அவரை யாரும் விமான நிலையத்தில் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது அடுத்த பிளஸ் பாயின்ட்.
இந்தத் திட்டத்தில்தான், விஷயம் சூடு ஆறியபின், அவர் சாவகாசமாக
வெளிநாட்டுக்குப் புறப்பட்டார் என்கிறார்கள் நமக்கு தகவல் சொன்ன சோர்ஸ்கள்.
மலேசியாவில் முதலீடுகள் இருப்பதால், அங்கு செல்லப் புறப்பட்டவர், அதற்காக தேர்ந்தெடுத்த விமான நிலையம்தான் திட்டத்தின் உச்சக் கட்டம்.திருச்சியில் இருந்து நேரடியாக மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு ஏர் ஏஷியாவின் விமான சேவை உள்ளது. அந்த வழியில் செல்ல முயலாமல், அவர் தேர்ந்தெடுத்த விமான நிலையம் கொச்சின். இந்த விமான நிலையம் தான் பெரிதாக அலர்ட் பண்ணாமல் சென்று வரக்கூடிய விமான நிலையம்
ராமஜெயம் இதனால் தான் கொச்சின் மூலம் செல்லும் ஐடியாவை போட்டார்,
பட்டியலில் நாம் முதலாவதாகக் குறிப்பிட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK530 துபாயிலிருந்து வந்திறங்கி, அதே விமானம் திரும்பிச் செல்லும்போது பயணம் செய்வதற்கு அதிகாலையில் கொச்சின் விமான நிலையத்துக்கு வந்திருந்தார் அவர்.
திருச்சியில் இருந்து நேரடியாக மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு ஏர் ஏஷியாவின் விமான சேவை உள்ளது. அந்த வழியில் செல்ல முயலாமல், அவர் தேர்ந்தெடுத்த விமான நிலையம் கொச்சின். இந்த விமான நிலையம்தான் பெரிதாக அலர்ட் பண்ணாமல் சென்று வரக்கூடிய விமான நிலையம்
இந்த இடத்தில் அவர் ஒரு சிறிய தவறு விட்டுவிட்டார்.
அவர் வெளிநாடு ஒன்றில் இருப்பதால் கைது செய்யப்பட முடியவில்லை என்ற பேச்சு கிளம்பியதல்லவா, அப்படியான ஒருவர்மீது கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், நாடு திரும்பும்போது அவரைக் கைது செய்வதற்கு விமான நிலையங்களுக்கு அறிவித்தல் செல்லும்.
அது நாடு திரும்பும் நபருக்காகத்தான் என்றாலும், ‘மற்றைய திசையிலும்’ அது வேலை செய்யும் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனதுதான், ராமஜெயம் விட்ட தவறு.
எப்படியென்றால், நாடு திரும்பும்போது அவரைப் பிடிப்பதற்காக அவரது பெயர் மற்றும் விபரங்கள் இமிகிரேஷன் இலாகாவுக்கு கிடைக்கிறதல்லவா? அதை அவர்கள் தமது கம்யூட்டரில் பதிவு செய்து கொள்வார்கள். அப்படிப் பதிவு செய்யப்படும்போது டிபோல்ட்டாக, அரைவல், டிப்பாச்சர் என்ற இரு சேர்ச்சுக்குமே பதிவாகிவிடும்.டிப்பாச்சர் பாசஞ்சரான ராமஜெயம், அரைவல் அலர்ட்டில் சிக்கியது அப்படித்தான்! ராமஜெயம் கொச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். கேரள மாநிலம், நெடுமஞ்சேரி காவல் நிலையத்தில் அவரை காவலில் வைத்துக்கொண்டு, திருச்சி காவல்துறைக்கு அறிவித்தது, கேரள போலிஸ்.
கைது விடயத்தை திரில் படக்கதைபோல சொல்லியிருக்கிறீர்கள்
ReplyDeleteநீங்க சொல்வது ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதை மாதிரி இருக்கு. நம்ம அரசியல் வாதிகளை நினைத்தாலே புல்லரிக்குது.
ReplyDelete