October 14, 2011

தினமணிக்கு இவ்வளவு தைரியமா? திராவிடமணி வியப்பு.

"எப்படி வந்தது இந்த தைரியம் தினமணிக்கு?" என்று திராவிட மணிகளால் எழுதப்பட்ட கட்டுரை தலைப்பை மட்டும் பார்த்ததுமே, முதலில் ஒன்றும் புரியவில்லை. திராவிடமணி அச்சப்படுகிற அளவுக்கு, "தைரியமாய் தினமணி" அப்படி என்ன காரியம் செய்திருக்கக்கூடும். ஐ.எம்.கே (ஐயர் முன்னேற்ற கழகம்) என்று கட்சி, கிட்சி ஆரம்பித்து விட்டார்களா? அல்லது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் எதையேனும் ஆதரித்து கட்டுரை எழுதி விட்டார்களா?

ஒரு வேளை, மேற்கண்ட இரண்டு காரியத்தையும் தினமணி செய்திருந்தாலும் கூட- அதனால் தவறொன்றும் இல்லையே. இந்தியாவில் இது வரை எவரும் சாதி கட்சியே தொடங்கவில்லையா அல்லது தடை செய்யப்பட்ட இயக்கத்தை எவரும் ஆதரிக்காமல் இருந்தது இல்லையா? திராவிடமணிகளே "சாதியை ஒழித்த சமர்ப்புலிகள்" என்று வசனம் பேசி கொண்டே, சாதி கட்சியோடு கூலாவுபவர்கள் தானே. அதே திராவிடமணிகள், "தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பதில் தவறில்லை" என்று "உச்சநீதிமன்றமே சொல்லி உள்ளது" என்று வியாக்கியானம் பேசுபவர்கள் தானே.

அப்படி என்ன காரியம் தினமணி செய்ததாம். திராவிடமணிகளே வியந்து, மிரண்டு கேட்கிற அளவுக்கு, "எப்படி வந்தது இந்தத் தைரியம் தினமணிக்கு?" என்று... யோசித்தவாறு கட்டுரையை வாசித்தோம். ஒன்றுமே இல்லை. கலைஞரை குறித்து எழுதும் போது, "பித்தலாட்டம், வக்கிரபுத்தி என்கிற சொற்களை கையாண்டுள்ளதாம் தினமணி". அதற்கு தான் பொங்கு பொங்கென்று பொங்கிவிட்டார்கள் திராவிடமணிகள்.

செல்வி.ஜெயலலிதாவை "திருமதி" ஜெயலலிதா என்று கலைஞர் சொன்ன போது - "வக்கிர புத்தி" என்கிற வார்த்தையை நிறைய பேர் கலைஞருக்காக -பயன்படுத்திவிட்டார்கள். அதனால் கலைஞரை தினமணி புதுசாக ஒன்றும் "வக்கிரபுத்தி" என்று சொல்லவில்லை. கலைஞரை பொறுத்தவரை, இதை விட அசிங்கமாக, அற்புதமாக - பிறரை பேசி இருக்கிறார். கலைஞரையும், வேறு பலர் பேசி இருக்கிறார்கள். "அரசியலில் இது சாதாரணம்" என்று கவுண்டமணி சொன்னது - திராவிடமணிக்கு தெரியாதா?

பித்தலாட்டம் என்றால் என்ன என்று பார்ப்போமா? ஆ.ராசாவாகட்டும், நீதிபதி தினகரனாகட்டும்... அவர்கள் மீது முறைகேடு வழக்கு சுமத்தப்பட்டத்தும் - திராவிடமணிகள் ."தலித் என்பதால் குற்றம் சாட்டுகிறார்கள்" என்று சொன்னார்களே, அது பித்தலாட்டம். ஜெயேந்திரை கொலை வழக்கில் கைது செய்ததும், பார்ப்பனர்கள் "பிராமணர் என்பதற்காக ஜெயேந்திரை குற்றம் சாட்டுகிறார்கள்" என்று வாய் திறந்திருந்தால் அது பித்தலாட்டம். இப்போது பித்தலாட்டத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்று தெரிந்திருக்கும்.

"நம்மை ஒருவர் அநாகரிகமாக பேசக்கூடாது" என்று நினைப்பது மனித இயல்பு. அதில் தவறொன்றுமில்லை. ஆனால், அப்படி பேசக்கூடாது என்று நினைக்கிற (பகுத்) அறிவு பெற்றவர்கள் - அடுத்தவரை தாம் அப்படி பேசக்கூடாது என்கிற அறிவை முதலில் பெற வேண்டும். நீங்கள் அப்படி ஏதேனும் அறிவு பெற்றிருக்கிறிர்களா? கர்மவீரரை அண்டக்காக்கா என்றீர்கள். தமிழுணர்வு போராளியை கள்ளத்தோணி என்று வர்ணித்தீர்கள். நீங்கள் தானா "பேச்சு நாகரீகம்" பற்றி பேசுவது. வியப்பாக உள்ளது. சரி...

 "எப்படி வந்தது இந்தத் தைரியம் தினமணிக்கு?" என்கிற கேள்வி சாதாரண கேள்வி அல்ல. பொட்டில் அடித்தாற் போல பதில் தருகிறோம். மேலும் கட்டுரை இப்படி தொடர்கிறது. "இந்த தைரியம், திமிர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. விமர்சனங்கள் வரட்டும் - வேண்டாம் என்று சொல்லவில்லை - 88 ஆண்டுகள் காணும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை - ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரை இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி சீண்டுவது - திராவிட இனவுணர்வைதூண்டுவதாகத்தான் பொருள்." என்கிறது கட்டுரை.

திராவிட உணர்வை, ஒரு முறையல்ல... பல முறை தூண்டிவிட்டு இருக்கிறார் மருத்துவர் ராமதாசு ஐயா. அவர் மீது ஏன் பொங்கவில்லை. "திராவிட கட்சிகளையே அழிப்பேன்" என்கிறார். ஏன் கப்சிப்பென்று இருக்கிறிர்கள். மருத்துவரென்றால் பயமா? மனுக்கொரு நீதி சொல்லுமாம் பார்ப்பனீயம். ஆள் பார்த்து, பலம் பார்த்து, மதம் பார்த்து பொங்குமாம் பகுத்தறிவிசம். இவர்களின் இந்த முரணை சொல்ல தைரியம் தேவையில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்கிற துடிப்பிருந்தால் போதும்.

தினகரன் அலுவலக படுகொலை, அலைக்கற்றை முறைகேடு - இதை பற்றி பேச என்று தைரியம் உங்களுக்கு வருகிறதோ... அன்று தினமணியின் "தைரியம்" பற்றி பேசுங்கள். எவரிடம் நேர்மை இல்லையோ - அவரை எதிர்ப்பது கஷ்டமில்லை. நேர்மை இல்லாத உங்களை விமர்சிப்பதா கஷ்டம். எவரிடம் நேர்மை இருக்கிறதோ - அவரால் யாரையும் எதிர்க்க முடியும். தினமணியிடம் நேர்மை உள்ளது. விமர்சிக்கிறது.

சங்கர்ராமன் படுகொலையை பற்றியும் எழுதும். நில அபகரிப்பை பற்றியும் எழுதும். அதற்கு, பெரிதாக எந்த "தைரியமும்" தேவை இல்லை. இதற்கேன் பகுத்தறிவு பொங்க வேண்டும். ஆயுத பூஜை குறித்து கலைஞர் சொன்ன கருத்துக்கு பதில் சொல்கிறார்கள். அவ்வளவு தான். தமிழில் உள்ள தினசரிகளில் தரம் ஒன்றே தாரக மந்திரமாக இருப்பது தினமணி மட்டுமே. ஒரு ஆபாசம் கிடையாது, ஒரு கிசுகிசு கிடையாது...

 அப்படிப்பட்ட தினமணி, ஏன் உங்களை மட்டும் தரங்கெட்டு விமர்சிக்க வேண்டும். "நீங்கள் எப்படி பிறரை விமர்சிக்கிறிர்களோ - அப்படி தான் பிறர் உங்களை விமர்சிக்கிறார்கள்". அப்படியே விமர்சித்தது. நீங்கள் "சர்ச்சைக்குரிய நபரை பற்றி எழுதும்போது - அவன், இவன்" என்று விளிக்காமல் எழுத பழகுங்கள். பிறகு பேசலாம், "வீர வசனங்களை". மேலும் கட்டுரை இப்படி முடிகிறது.



"திராவிட இயக்கத் தலைவர்களை கேவலமான முறையில் விமர்சனம் செய்ய நினைத்தால்... பதிலடி பத்து மடங்கு கிடைக்கும் எச்சரிக்கை" என்ன எச்சரிக்கை. தினமணி - பல நேரங்களில் உண்மைகளை எழுதினாலே, திராவிட மணிகளுக்கு, "தங்களை கேவலப்படுத்துவது போல தெரிந்தால் தினமணி என்ன செய்யும்". இப்படியே எச்சரிக்கை விட்டு கொண்டே இருங்கள். காசா... பணமா...

6 comments:

  1. சபாஷ். சரியான கட்டுரை.

    ReplyDelete
  2. திராவிடமணிOctober 14, 2011 3:50 PM

    இப்படியெல்லாம் நீங்க கேட்டா மட்டும் நாங்க திருந்திடுவோமா... எப்பூடி.

    ReplyDelete
  3. yey.. ippo nee enna solla varay..!

    ReplyDelete
  4. அனானி, எழுதினது புரியலன்னா என்ன அர்த்தம். படிக்க தெரியாதா? உங்க யோக்யதைய வளர்த்துக்க சொல்றேன்.

    ReplyDelete
  5. அவர்களுக்கு தெரிந்த, விரும்பும் நியாயத்தை சொல்லுவது தான் பகுத்தறிவு! மற்றவரை காட்டுத்தனமாக விமர்சிப்பது கூடுதல் பகுத்தறிவு! நல்ல அலசல்!

    ReplyDelete
  6. //கர்மவீரரை அண்டக்காக்கா என்றீர்கள்//
    என்னவெல்லோமோ என்றார்கள்.

    இந்த நாகரீக விமர்சனங்களுகு, கர்மவீரரின் பதில்கள்- அவரின் வாழ்கை வாழ்வுமுறை. கொஞ்சம் அவரின் நினைவிடத்தை பார்த்து வந்தால் அவர்களுக்கு தெரியும்.

    ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.

இடுகைக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களும், வெறுமனே பாரா(தி)ட்டும் பின்னூட்டங்களும் வெளியிடப்படா.

LinkWithin

Related Posts with Thumbnails