.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

December 10, 2011

கம்யூனிஸ்ட்களின் அமெரிக்க புரட்சி கனவு.

புரட்சி பற்றி கனவு காண்பதில் கம்யூனிஸ்ட்களுக்கு நிகர் கம்யூனிஸ்ட்களே. புரட்சி செய்து கம்யூனிஸத்தை மலரச் செய்த தேசத்தில் கூட கம்யூனிஸத்தை தக்க வைத்து கொள்ள தெரியாதவர்கள், திராணி இல்லாதவர்கள் தான் கம்யூனிஸத்தை உலகம் முழுக்க பரப்ப போகிறார்களாம். இருக்கிற ஜனநாயக நாட்டில் எல்லாம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து -சர்வாதிகாரத்தை, மனித உரிமை மறுப்பை திணிப்பது குறித்து நிறையவே எழுதுகிறார்கள்.

இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்வும் உள்ளது. படித்து சிரிக்கலாம். அப்படி நம்மை சிரிக்க வைத்த அவர்களின் ஒரு முழக்கத்தை பார்ப்போம்."வெள்ளை மாளிகையின் பாதாளச் சாக்கடையில் பதுங்கி, ஒளிந்து கொண்டிருந்த பராக் ஒபாமாவை நேட்டோ படைகள் வெளியே தரதரவென இழுத்து சுட்டுக்கொன்றன. அமெரிக்காவில் அரசு அமைக்கும் அதிகாரத்தை வால்ஸ் டிரிட்டை கைப்பற்றுவோம் குழுவின் கையில் ஒப்படைத்தன நேட்டோ படைகள். பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னராக நடந்து முடிந்து மக்கள் மறந்து போயிருக்க வேண்டிய செய்தியிது. ஆயினும், நடக்க போவதில்லை." என்கிறது அந்த கட்டுரை.

கடாபியும், ஓபாமாவும் ஒன்றா? இதுவே அவர்களின் மோசமான உவமானம். பங்கு சந்தைக்கு எதிரான அதிருப்திக்கெல்லாம் நேட்டோ படை வந்து தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போலும். கணவன் மனைவி சண்டையை கூட நேட்டோ படை வந்து தீர்க்க வேண்டும் என்பார்கள் போலும்.
வால்ஸ்டிரீட் போராட்டமும் லிபியாவில் நடந்த மக்கள் புரட்சியும் ஒன்றா? வேலை கேட்பதும், சுதந்திரம் கோருவதும் ஒன்றா? ஜனநாயக நாட்டில் நடக்கும் மக்கள் போராட்டமும், சர்வாதிகாரிகளின் நாட்டில் நடக்கும் மக்கள் போராட்டமும் ஒன்றா?

அமெரிக்காவில் "வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்" என்று போராடியவர்கள் எவரேனும் இதுவரை சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்களா? இதே போராட்டம் சீனாவிலும், கியூபாவிலும் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டிருப்பார்கள். வேலை கேட்பதை கூட - அரசுக்கு எதிரான புரட்சியாக கருதி இருப்பார்கள். அரண்ட கம்யூனிஸ்ட்களுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்தியானமன் சசதுக்கத்தில் என்ன நடந்ததோ - அதுவே நடந்திருக்கும். அப்போது இப்படி எழுதி இருப்பார்களா?

 " பாதாள சாக்கடையில் ஒளிந்திருந்த சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவை இழுத்து வந்த நோட்டோ படைகள்"என்று.தியானமன் சசதுக்கத்தில் ஜனநாயகம் வேண்டி போராட்டம் நடத்தியவர்களை கூட கொச்சைப்படுத்தி முழக்கமிட்டவர்கள் தானே இங்கே உள்ள மனித உரிமை பேசுபவர்கள். சரி கம்யூனிஸ்ட்களின் கனவு பலிக்குமா? ஏற்கனவே சென்னைக்கு புரட்சியை இப்படி அழைத்தார்கள். " எகிப்தின் சுதந்திர சதுக்கம், பேர்ல்ஸ் சதுக்கம், கிரீன்ஸ் சதுக்கம் என தொடங்கிய புரட்சி அண்ணா சதுக்கம்" என்றும் மாறலாம் என்று எழுதினார்கள்.

இப்போது அவர்களின் அமெரிக்க புரட்டு கனவை பார்ப்போம்.
"வால்ஸ்டிரீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது தற்செயலான ஒன்றல்ல. இதுவரையான உலக வரலாற்றை மாற்றுவதற்கான மகத்தான போராட்டம். மாற்றம் என்ற வார்த்தையைத் தவிர உலகில் அனைத்தும் மாறும் என்ற மார்க்ஸின் வரிகளை வழிமொழிந்து உரக்கப்பேசும் போராட்டம். "

வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் போராட்டக்காரர்கள் துவக்கிவைத்திருக்கிறார்கள். ஆம், துவக்கி மட்டுமே வைத்திருக்கிறார்கள். உலக தொழிலாளர் வர்க்கம் அதை முன்னெடுத்து செல்லும்" என்று கதை விடுகிறார். வால்ஸ்டிரிட் போராட்டம் வெல்லுமா? இந்த கேள்வியே முதலில் நகைப்புக்குரியது. அமெரிக்காவில் இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் - புதிய பணிக்காக வேலைக்கு செல்பவர்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். அதே நேரம் அமெரிக்கர்களின் மத்தியில் வேலை இல்லா திண்டாட்டம் பெருகி இருப்பதாக சொல்லப்படுகிறது. பொருளாதார மந்த நிலை வேறு.

இந்த பிரச்சனை அமெரிக்காவுக்கு மட்டும் உரித்தானதல்ல. எல்லா நாடுகளுக்கும் இருப்பதே. தமிழகத்தில் கூட உள்ளது. தமிழகத்தில் வேலை இல்லை என்று சொல்பவர்கள் ஒரு புறம். அதே நேரம் பல வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதும் உண்மை. இங்கே வேலைக்கு வந்து குவியும் வெளி மாநிலத்தவர் ஒரு பக்கம். இந்த முரண் அரபு நாடுகளிலும் உள்ளது. அதனாலேயே அரபு நாடுகள் உட்பட பல நாடுகள் - தம் நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர முடிவு செய்துள்ளன. (உள்ளுர்க்காரர்களுக்கு கிடைக்காத வேலை வெளிநாட்டவனுக்கு எப்படி கிடைக்கிறது. இது குறித்த முழுமையான ஆய்வு பதிவு விரைவில்)

அரபு நாடுகளின் நிலையை அமெரிக்காவும் மேற் கொண்டால் - வால்ஸ்டிரிட் போராட்டக்காரர்கள் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் "அனுப்புவதில்" சிக்கல் உள்ளது. மேலும் பொருளாதார தேக்க நிலை என்பது ஏற்படக்கூடியதே. ஒரு தனி மனிதனில் இருந்து ஒரு சேதம் வரை என்று எங்கும் இருப்பதே. நன்றாக சம்பாதிப்பவன் நன்றாக செலவு செய்வான். திடீரென்று வருமானம் குறையும் போது - உடனடியாக எல்லோராலும் குறைகிற வருமானத்திற்கேற்ப செலவு செய்வதை குறைக்க முடியாது.

தன்னால் திரும்ப அடைக்க முடியுமா என்பதை உணராமல் கடன் வாங்கி செலவு செய்வான். கடன் வாங்கி விட்டு பிறகு முழிப்பான். இது தேசத்திற்கும் பொருந்தக்கூடியதே. அமெரிக்கர்களின் லைப் ஸ்டைலை பார்த்தவர்களுக்கு இது ஒரு விஷயமாக தெரியாது. வங்கிகள் பணம் இருக்கிறது என்று பணத்தை வாரி இறைக்க - அதுவும் பொருளாதார தேக்க நிலைக்கு காரணமானது. இந்தியாவிலும் சேமிப்பை மறந்த - புதிய பணக்காரர்களும் - இம்மாதிரியான சிக்கலில் மாட்டி கொள்ளும் அபாயம் உள்ளது.



அவர்கள் நாளை இந்தியாவின் வால்ஸ்டிரிட் போராட்டக்காரர்கள். நான் முட்டாள்தனமாக வாழ்ந்துவிட்டு, என் இயலாமையை "தொழிலாளர்களுக்கு எதிரான நிலையாக" அறைக்கூவல் விடுத்தால் எப்படி. ஆனால் அதையும் மெய் என நம்பி, "வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் போராட்டக்காரர்கள் துவக்கிவைத்திருக்கிறார்கள். ஆம், துவக்கி மட்டுமே வைத்திருக்கிறார்கள். உலகத்தொழிலாளர் வர்க்கம் அதை முன்னெடுத்து செல்லும்" என்பது - வால்ஸ்டிரிட் போராட்ட காரணங்களை சரி வர உணராமல் - அமெரிக்காவை ஏச, கம்யூனிசத்தை தூக்கி பேச பயன்படுத்தினால் மட்டும் போராட்டம் வெல்ல போகிறதா என்ன. ஆடம்பரமாக வாழ்ந்து கெட்டவனின் துயரமும், சோற்றுக்கே வழி இல்லாதவனின் துயரமும் ஒன்று என்று கம்யூனிஸ்ட்கள் நினைக்கிறார்கள் போலும்.

தொடர்புடைய பதிவுகள் :


6 comments:

  1. முழுக்க முட்டாள்தனமான வாதங்கள் அமெரிக்க மக்கள் வேலைக்காக மட்டும் போராடவில்லை சம உரிமைக்காகவும் போராடுகிறார்கள் அவர்களின் பிரதான்கோசமே நாங்கள் 99 என்பதே?

    ஒபமா கடாபி இருவருக்கும் உள்ள வித்தியாம் ஒன்றும் இல்லை இருவரும் ஒவ்வொரு நாட்டின் அதிபர்கள்: ஒருவர் ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரியாகவும் இன்னொருவர் சார்வ அதிகாரத்தை 2000க்கு பிறகு பரிகொடுத்த அமெரிக்காவின் நெருங்கிய நன்பர் ஆவார்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஒபாமாவும் கடாபியும் ஒண்ணுதான். அப்ப கம்யூனிஸ்ட் கட்சியும் ஒபாமாவும் கூடதான் ஒண்ணு.

      முட்டாள்தனமான வாதமா? எப்படிங்க உங்கள மாதிரி பகுத்தறிவு பேசுறவுங்கள்ளாம் இப்படி ஏதோ சாதாரணமா பேசுறது போல முட்டாள்னு சொல்றீங்க. உங்க பகுத்தறிவு அவ்வளவு வேலை செய்யுது?

      Delete
    2. கம்யூனிஸ அறிவு அவ்வளவு தான் வேலை செய்யும்.

      Delete
  2. கடாபியும் ஓபாமாவும் ஒன்றா? இதுவே அவர்களின் மோசமான உவமானம்.

    சரியாக கூறினீர்கள். மதவாதிகளின் நகைசுவை உணர்வு இவர்களுக்கும் வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள தாராள மத உரிமை பயன்படுத்தி இஸ்லாமிய கலாச்சார மையம் கட்டுவதற்க்கு ஒபாமா நிர்வாகத்தால் கொடுக்கபட்ட அனுமதியை அமெரிக்கா தங்களது மத நாடாக மாறுகிறது என்று மதவாதிகள் பிரசாரம் செய்வது போன்றது தான் இதுவும்.

    ReplyDelete
  3. வால் ஸ்டிரீட் போராட்டம் என்பது, அமெரிக்காவின் பொருளாதார கொள்கை மற்றும் political-economic system மாற்ற ஒரு போராட்டம். இது neo-conservatism, laisee faire, ஆகிய Republican party யின் கொள்கைக்கு எதிர்த்து நடப்பது. இது புஷ் காலத்தில் உச்சியில் இருந்த்து. ஓபாமாவால் மாற்ற முடியவில்லை அதனால் இந்த போராட்டம். இதைப் போய் ”புரட்சி” என்று சொல்வது ரொம்ப அதிகம்.

    இந்தப் போராட்டத்தை எதிர்ப்பவர்களான குடியரசு கட்சியில் இருப்பவர்கஆள் அமெரிக்காவில் பாதிக்கு பாதி ஆதரவு இருக்கின்றது.

    ReplyDelete
  4. //ஆடம்பரமாக வாழ்ந்து கெட்டவனின் துயரமும், சோற்றுக்கே வழி இல்லாதவனின் துயரமும் ஒன்று என்று கம்யூனிஸ்ட்கள் நினைக்கிறார்கள் போலும்.//

    சூப்பர். இது ஒன்றுபோதுமே கம்யூனிஸ்டுகளின் நிலையை விளக்க

    ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails