பகுத்தறிவு பொய் பேசுமா? பேசினால் அது பகுத்தறிவா? ஆனால் பேசி உள்ளதே. அனைவருக்கும் தெரிந்த சமகால விஷயம் குறித்து எழுதும்போதே - பகுத்தறிவு பொய் பித்தலாட்டத்துடன் ஒரு தகவலை தருகிறதே. இந்த லட்சணத்தில் தானே இருக்கும் இவர்கள் எழுதும் ஆய்வு நூல்களும், இவர்களின் திராவிட வரலாற்று புரட்டுகளும்... பார்ப்பன புரட்டை விட பயங்கர புரட்டாக இருக்கும் போலும் - இந்த அறிவாளிகளின் புரட்டு. அவர்களின் புரட்டுகளை சொல்வதற்கு முன்னால்.நமது பகுத்தறிவு நண்பர் ஒரு மாதிரியாக இருந்தார். "என்ன தோழரே... ஒரு மாதிரியா இருக்கீங்க" என்று கேட்டோம். "நாலு நாளா மோஷன் (ஆய்) சரியா போக மாட்டேங்குது" என்றார். "பார்ப்பனர்களின் சதியாக இருக்கும் தோழரே" என்றோம். "என்ன கிண்டலா?" என்றார். "இல்ல, இல்ல. எதற்கெடுத்தாலும் பார்ப்பனியத்தைதானே சொல்லணும். அப்படி சொன்னா தானே பகுத்தறிவு. பெருமையும் கூட" என்று கூறிவிட்டு - "ஏன் அப்படி சொன்னோம்" என்பதை விடுதலையில் நாம் வாசித்த ஒரு செய்தியையும், அதன் புரட்டையும் பற்றி சுட்டி காட்ட துவங்கினோம்.
"புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சாந்தி தோகாவில் நடந்த தடகளப் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். காலம் அவரை மறக்க வைக்காமல் அனைவரின் மனதிலும் இருத்தி வைத்திருப்பதற்கான காரணம் - பதக்கம் பெற்றது மட்டுமல்ல... கொடுத்த பதக்கத்தையும் பாலினச்சர்ச்சையின் காரணமாக பறித்ததால் சாந்தியை எவராலும் மறக்க இயலாது. அந்த சாந்தியின் பதக்கம் பறிக்கப்பட்டதற்கான காரணமாக நாம் இதுநாள்வரை "பாலினச்சர்ச்சையே" என்று தான் நினைக்க - பகுத்தறிவு இதழான விடுதலை புதுசாய் ஒன்றை கிளப்பி விட்டுள்ளது.
அதை வாசித்தால் புரியும், அதனால் தான் சொன்னோம்...பொய்யும், புரட்டும் பகுத்தறிவின் இரண்டு கண்களா என்று. சமகாலத்தில் நடந்த ஒரு விஷயத்தை பற்றி எழுதும் போதே திரித்து கூறுபவர்களா - ஆய்வு நூல்களையும், தமிழர்களின் வரலாற்றையும் பொய் கலப்பின்றி நேர்மையாக எழுத போகிறார்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதாதா" பிற விஷயங்களின் வண்டவாளங்கள் பற்றி தெரிய... வாசியுங்கள் விடுதலையில் வந்த அந்த செய்தியை. "அனைவரும் கேள்விப்பட்ட நபர் கத்தக்குறிச்சி சாந்தி. இந்திய அளவில் சாந்தி என்றால் விளையாட்டுத்துறையில் தோகாவில் போய் பரிசு வாங்கி இந்திய மானத்தை உலக அளவில் காத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.
அந்தப் பரிசை சாந்தியிடமிருந்து பார்ப்பனக் கூட்டம் திருப்பிப் பறித்து விடத்துடித்து அடங்கிப் போய் விட்டது." என்கிறது விடுதலை சாந்தியின் பதக்கம் பறிக்கப்பட்டது பற்றி சொல்லும்போது. இங்கே எங்கே பார்ப்பனியம் வந்தது. பாலினச்சர்ச்சைக்கும், பார்ப்பனியத்துக்க்கும் என்னய்யா சம்பந்தம். பகுத்தறிவிலிகள் தான் விளக்க வேண்டும்.
அப்போதைய காலக்கட்டத்தில் வந்த செய்திகளை வாசித்தால் - பகுத்தறிவின் சூது தெரியும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தமிழக வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனுக்கு நடத்தப்பட்ட பாலினச் சோதனையில் (ஜென்டர் டெஸ்ட்) அவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட பதக்கம் பறி போகும் அபாயம் எழுந்துள்ளது. தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து தமிழக அரசு அவருக்கு ரூ. 15 லட்சம் பரிசை அறிவித்தது.
புதுக்கோட்டை அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு இந்த நிதியுதவியை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் சாந்திக்கு நடத்தப்பட்ட பாலினச் சோதனையில் அவரது பெண் தன்மை குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. காரணம், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹார்மோன் அளவு சாந்தியிடம் இல்லை என சோதனையில் தெரியவந்ததே காரணம். எனவே இந்த சோதனையில் சாந்தி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சாந்தியின் வெள்ளிப் பதக்கம் பறிமுதல் செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்த தகவல் இந்தியாவில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

பகுத்தறிவின் விஷம செய்தி சாதாரணமானது, இதை இவ்வளவு பெரிது படுத்த வேண்டுமா? அனைவருக்கும் தெரிந்த செய்தி, பகுத்தறிவு சொல்லும் பொய்யால் மட்டும் உண்மை செய்தி ஆகிவிடுமா" என்று இந்த பதிவை வாசிப்பவர்கள் கேட்கலாம். பகுத்தறிவின் பொய் உண்மையாகாது தான். ஆனால் இந்த செய்தியையே சில வருஷங்கள் கழித்து - புதியதாய் ஒருவர் வாசிக்கும்போது பகுத்தறிவு சொன்னது உண்மை என்று நம்பிவிடக் கூடாதில்லையா? தற்காலத்திலேயே இதை நாம் வாசிக்கும்போது - அவர்கள் சொல்லும் பிற விஷயத்திலும், இதே மாதிரி பொய்கள் எத்தனை சதவிதம் இருக்கக்கூடும் என்பதையும் அவதானிக்கலாம் இல்லையா?
பார்ப்பனியத்தை எங்கெல்லாம் பயன்படுத்துவது என்கிற விவஸ்தை வேண்டாமா? பொய்யாக நான்கு இடத்தில் பார்ப்பனியத்தை போட்டால் - மெய்யான இடத்தில் பார்ப்பனியத்தின் புரட்டை போட்டால் கூட எவரும் நம்ப மாட்டார்களே. "பொய்யாக எங்கு போடுகிறாய்... மெய்யாக எங்கு போடுகிறாய்..." என்பது புரியாதே. "இவங்களுக்கு வேற வேலையே இல்லையா" என்கிற அவச்சொல் தான் மிஞ்சும். இப்போதும் அது தான் நடக்கிறது. நம் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களும் அதை தான் சொல்கிறது.
பார்ப்பனியத்தை திட்டுவதற்கு எத்தனையோ இடங்கள், எத்தனையோ விஷயங்கள் உள்ளது. அங்கே பார்த்து கொள்ளுங்கள். எந்த விஷயம் பற்றி எழுதினாலும், பொய்யாகவாவது பார்ப்பனியத்தை விமர்சித்து எழுதினால் தான் - அந்த கட்டுரை முழுமை அடையும் என்று மட்டரகமாக நினைக்க வேண்டாம். அவப்பெயர் தான் மிஞ்சும். இவர்களின் சமீபத்திய அரைகுறை செய்தி, ரஷ்யா நீதிமன்றத்தில் ஒரு பிரிவினரால் "பகவத்கீதை" தடைக்கோரப்பட்ட விஷயத்தை பெரிதாக செய்தி போட்டவர்கள் - அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதையும் செய்தியாக போட வேண்டும் தானே. எந்த செய்தியையும் முழுமையாக போடாதவர்கள் அரைகுறையாளர்கள் தானே. செய்தி போடுவதிலேயே நேர்மை இல்லாதவர்கள் தான் பகுத்தறிவாளர்களாம்.
அனைவருக்கும் பரிட்ச்சயமான இந்த திருக்குறள் கொண்டு இந்த பதிவை நிறைவு செய்யலாம். காரணம் பகுத்தறிவுக்கு தேவையான திருக்குறள்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"
ஏதாவது ஒரு செய்தியை எவர் கூறினாலும், பகுத்தறிவாளர்களே கூறினாலும், அச்செய்தியின் உண்மை என்ன என தனது அறிவு கொண்டு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே ஏற்க வேண்டும். சொன்னவர் யார் என்பது முக்கியமன்று. எவ்வளவு பெரிய தலைவர் என்பது முக்கியமன்று. காரணம் - சுய லாபத்துக்காக உண்மை பேசுபவர்கள், சுய லாபத்துக்காக பொய்யுரைப்பவர்கள் நிரம்பிய உலகம் இது. அதனால் சொன்னவர் யார் என்பது முக்கியமன்று. சொன்ன செய்தி உண்மையா, பொய்யா என்று தான் நோக்க வேண்டும். அப்படி நோக்கினால் தான் பார்ப்பானின் பொய்யும் வெளியே வரும். பகுத்தறிவின் சுயரூபமும் தெரியும்.
இந்தக் கட்டுரை, மறைமுகமாக பெரியார் பித்தலாட்டக்காரர் என சித்தரிக்கும் விதமாக
ReplyDeleteஇருக்கிறது. கடவுள்,சாதி பெயரால் அந்தக்காலத்தில் நடந்த பல கொடுமைகளை எதிர்த்து, பகுத்தறிவின் பெருமையை
நமக்கு உணர்த்தியவர் அவர்.அது போலத் தான் அவரது கொள்கைகளும்.
இந்தக் காலத்தில், பலர் பொய்களைக் கூறி ஏய்க்கிறார்கள் என்றும் அதை எதிர்த்து நீங்கள் பேசுகிறீர் என்பதும் இந்த பகுத்தறிவினால்
தான். ஆக, பகுத்தறிவுவாதிகள் என பிரித்துப் பார்க்காமல், அவர்களும் மனிதர்கள் என்பதையும்,
அவப் பேச்சுகள் வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.ஒரு சில பதர்கள் இப்படிப் பேசும்போது அவர்களை நீங்கள் பகுத்தறிவுவாதிகள் எனக் கூறுவதில் அர்த்தம் இல்லை.
Anonymous said...
ReplyDeleteஇந்தக் கட்டுரை, மறைமுகமாக பெரியார் பித்தலாட்டக்காரர் என சித்தரிக்கும் விதமாக
இருக்கிறது. கடவுள்,சாதி பெயரால் அந்தக்காலத்தில் நடந்த பல கொடுமைகளை எதிர்த்து, பகுத்தறிவின் பெருமையை
நமக்கு உணர்த்தியவர் அவர்.அது போலத் தான் அவரது கொள்கைகளும்.
இந்தக் காலத்தில், பலர் பொய்களைக் கூறி ஏய்க்கிறார்கள் என்றும் அதை எதிர்த்து நீங்கள் பேசுகிறீர் என்பதும் இந்த பகுத்தறிவினால்
தான். ஆக, பகுத்தறிவுவாதிகள் என பிரித்துப் பார்க்காமல், அவர்களும் மனிதர்கள் என்பதையும்,
அவப் பேச்சுகள் வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்,//////
பெரியாரே இந்த பதிவில் வரவில்லையே. பெரியாரை ஏன் இங்கே இழுக்கிறிர்கள். பெரியார் பேரை சொல்பவர்கள் என்பதற்காக - அவர்களின் பொய்யை கண்டும் காணாமல் விட சொல்கிறிர்களா? உங்களால் முடியலாம். என்னால் முடியாதே.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteAnonymous said...
ReplyDeleteஇந்தக் காலத்தில், பலர் பொய்களைக் கூறி ஏய்க்கிறார்கள் என்றும் அதை எதிர்த்து நீங்கள் பேசுகிறீர் என்பதும் இந்த பகுத்தறிவினால்
தான். ஆக, பகுத்தறிவுவாதிகள் என பிரித்துப் பார்க்காமல், அவர்களும் மனிதர்கள் என்பதையும்,
அவப் பேச்சுகள் வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.ஒரு சில பதர்கள் இப்படிப் பேசும்போது////
என்ன வேணும்னாலும் பொய் சொல்வோம். கண்டுக்கக்கூடாதுன்னு சொல்றிங்களா? மேலும் அந்த பதர்கள் திராவிடர் கழகத்தில் அல்லவா இருக்கிறார்கள். தெருவில் போகிறவர்கள் பொய் சொன்னால் அவர்களும் மனிதர்கள் என்று விட்டு விடலாம் நீங்கள் சொல்வது போல. ஆனால் இவர்கள் சமுகத்தை உய்விக்க வந்தவர்களாக அல்லவா சொல்லி கொள்கிறார்கள்.
நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.
ReplyDelete"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
ReplyDeleteஅப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"
என் பதிவும் அதைப் பற்றியதே! நன்றி!
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"