February 15, 2012

விகடன் வழியில் வீரமணி ஏடு...

விகடன் வழியில் மானமிகு கி.வீரமணி  விடுதலை ஏடு நடை போட துவங்கி உள்ளது... "ஓரளவுக்கு விகடனை போல நடுநிலை ஏடாக மாறி கீறி தொலைத்து விட்டதோ" என்று கேட்டுவிடாதீர்கள். ஜூனியர்விகடன் போல, நக்கீரன் போல, குமுதம் ரிப்போர்ட்டர் போல புலனாய்வு துறை பத்திரிகையாக உரு மாறி கொண்டு வருகிறதோ என்று ஒரு சந்தேகம் வந்துள்ளதால் அப்படி சொன்னோம்.

 "அது நல்ல விஷயம் தானே. ஊழல் பெருச்சாளிகளை, அயோக்கியர்களை பற்றி பேச முனைந்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம் தானே. இவ்வளவு காலமும் விடுதலையை பார்த்து ஆரியர்கள் பயந்த(?) மாதிரி இனி திருடர்களும் பயப்படுவார்களே" என்றார் நண்பர்.

"நல்லா பயப்பட்டானுங்க. எழுதறவன் யோக்கியனா இருந்தா தானய்யா எழுத்தில் வந்தவன் அச்சப்படுவான். எப்பவும் நீங்க அவசரக்குடுக்கை தான். விகடன் வழியில் விடுதலை என்று தான் சொன்னேனே ஒழிய, நடுநிலை ஏடாக திருந்திட்டாங்கன்னு சொன்னேனா. இனி லஞ்சம் வாங்குறவனோட, வன்முறையில் ஈடுபடுகிறவனோட, குண்டு வைக்கிறவனோட சாதி, மதம் பார்த்து கருத்து தெரிவிக்க மாட்டாங்கன்னு நினைச்சிடாதிங்க. அது வேற, இது வேற" என்றதும் - "புரியும்படி சொல்லுங்க" என்றார் நண்பர்.

"பிற புலனாய்வு பத்திரிகைகள் சமூக அவலங்களை புலனாயும் என்றால் - இவர்கள் யார் யார் எந்த கோவிலில் போய் மொட்டை போடுகிறார்கள், காது குத்துகிறார்கள், உண்டியலில் எவ்வளவு பணம் போடுகிறார்கள், கடா வெட்டுகிறார்கள் என்று புலனாய்வு செய்வார்கள்" என்றோம். "அப்ப தானே ஓசில கறி சோறு கிடைச்சாலும் கிடைக்கும். ஏற்கனவே ரஜினி மனைவி லதா மொட்டை போட்டது குறித்து அவர்கள் போட்ட பதிவுக்கு பதிலடியா "லதா ரஜினி போட்ட மொட்டையும், பகுத்தறிவு போட்ட மொட்டையும்" னு ஒரு பதிவு அருமையா எழுதி இருந்தீங்களே"

"ஆமாம். ஆமாம். இப்ப அதே ரஜினி மருமகன் தனுஷ் திருப்பதிக்கு போய் மொட்டை போட்டு இருக்கார். இலவு காத்த கிளியாக காத்திருக்கும் பகுத்தறிவு - மொட்டையை பார்த்தா சும்மா இருக்குமா? எந்த கோவில் மொட்டை, எத்தனை பேரு போட்டாங்க மொட்டைன்னு துப்பறிஞ்சிருக்கு. ஊழலை பண்ணிட்டு கோவில் கோவிலா போற பகுத்தறிவு கும்பல்களை பத்தி எழுத துப்பு இல்லை. மானங்கெட்ட பகுத்தறிவுக்கு. சி.பி.ஐ விசாரனை துவக்கிவிடும் என்கிற அச்சத்தில் விமானம் ஏறின திராவிட கலாநிதி மாறனை பத்தி எழுத தெரியாத விடுதலை ஏடு தனுஷை பத்தி இப்படி எழுதி இருக்கு"

"கொல வெறி பாடல் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தன் மனைவியுடன் சென்று திருப்பதி கோவிலில் மொட்டை போட்டார்!
கொல வெறி பாடல் என்ன அப்படி உயர்ந்த பாடலா? இது வெற்றி பெற்று விட்டதா? அப்படியே வெற்றி பெற்று இருந்தாலும் அதற்கு ஏழுமலையான் எந்த வகையில் உதவி புரிந்தான்? தன் திறமையில் தன்னம்பிக்கை இல்லையா? தனது இருப்பில் உள்ள நகைகளையே காப்பாற்றிக் கொள்ள வக்கில்லாதவனாக ஏழுமலை யான் இருக்கிறான். விசயம் உயர்நீதிமன்றம் வரை சென்று சிரிப்பாய் சிரிக்கிறது. அது சரி மொட்டை போட்டு, முடியைக் காணிக்கையாக கொடுத்திருக்கிறாரே நடிகர் தனுஷ், ஒரு சுண்டு விரலைக் காணிக்கையாக ஏன் கொடுக்க வில்லை?" என்கிறது விடுதலை ஏடு.

மேலே இணைத்துள்ள மொட்டை போடும் இரண்டு பெண்கள் புகைப்படத்துக்கும், தி.மு.க எம்பி வசந்திஸ்டான்லிக்கும் ஒற்றுமை உண்டு. அந்த பெண்கள் ரஜினி உடல் நலமடைய மொட்டை போட்ட ரஜினி ரசிகைகள். வசந்தி ஸ்டான்லி திகார் சிறையில் இருந்து கனிமொழி வெளியே வர மொட்டை போட்டவர். எந்த மொட்டை பெஸ்ட், எந்த மொட்டை ஒஸ்ட் என்று பெரியார் தான் சொல்ல வேண்டும்.

இந்த நாட்டில் இறை வழிபாடு தடை செய்யப்பட்டுள்ளதா? இப்படி பேசுவதை தான் பகுத்தறிவு என்று நினைத்து கொண்டிருக்கிறார்ர்கள். இது பகுத்தறவல்ல. வேலை வெட்டி இல்லாதவன், நல்லா இருப்பவனை பார்த்து பொரணி பேசுவானே - அது தான் இது. ஊழல் செய்து சிறைக்கு செல்வதை விட கேவலம் நேர்த்திக்கடன் இருந்து கோவிலுக்கு போவது என்று நாத்திக கும்பல் நினைக்கிறது போலும். ஒரு வேளை கோவில்

நிலத்தை ஆக்ரமிப்பு செய்வதால் - அவர்களின் தவறுகளை கண்டு கொள்வதில்லை போலும் நாத்திகம். இதற்கு பதிலடியாக இன்னொரு பகுத்தறிவாளர் - வீரமணி கும்பலை போல் அல்லாத உண்மையான, நேர்மையான பகுத்தறிவாளர் - கனிமொழி ஜாமினில் வெளியே வந்த அன்று, தம் வலைப்பதிவில் வீரமணி கும்பல்களுக்கு புத்தி வரும் விதமாக இப்படி எழுதி இருக்கிறார்.

 "கனிமொழியின் ஜாமீனுக்காக மொட்டை போட்ட தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. வசந்தி ஸ்டான்லியின் ஆசையை, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் வந்துதான் நிறைவேற்றி வைத்துவிட்டாரோ? ஒருக்கால், வசந்தி ஸ்டான்லி முடியைக் கொடுத்ததற்குப் பதிலாகத் தனது விரலை வெட்டிக் காணிக்கையாக போட்டிருந்தால், கனிமொழிக்கு வழக்கிலிருந்து விடுதலையே கூடக் கிடைத்திருக்குமோ என்னவோ?" வீரமணி வகையறாக்களுக்கு பொட்டில் அடித்தாற் போல் உரைக்கவில்லையா? பகுத்தறிவு என்பது இதுதானய்யா?

"தவறை எவர் செய்தாலும் தட்டி கேட்பது" . ஆனால் வீரமணி பகுத்தறிவு என்பதோ மொட்டை, உண்டியல், சிலையை காணோம் என்பது தாண்டி சிந்திருக்குமா? "குடுமியை பார்த்தால் கும்முவதும், மீசையை பார்த்தால் பம்முவதும்" பகுத்தறிவுக்கே புது விளக்கம் தந்திருக்கிறார்கள். அவரது முடியை அவர் தருகிறார் - உங்களுக்கென்னய்யா வந்தது. சமூகத்தை திருத்த வேண்டும் என்கிற கொல வெறி இருந்தால் - உங்கள் பங்காளிகளிடம் இருந்து சீர்திருத்ததை துவக்குங்கள்.

ஏன் எனில் ஊழலில் இருந்து தப்பிக்க போட்ட மொட்டையை விட கேவலமல்ல கொலவெறி பாடலுக்கு போட்ட மொட்டை. எப்படி தான் இவ்வளவு அசிங்கத்தை பின்னால் வைத்து கொண்டு கருஞ்சட்டை, அடுத்தவனை பார்த்து மூக்கை பொத்தி கொள்கிறதோ. ஓ! இது தான் பகுத்தறிவோ. கொலவெறி பாடலின் வெற்றியில் திருப்பதி எழுமலையானுக்கு என்ன பங்கு என்று புத்திசாலிதனமாக(?) கேட்பதாக நினைக்கும் பகுத்தறிவு - இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக, திராவிட பங்காளிகளிடம் போய் ஊழல் செய்து மாட்டி கொள்ளாமல் இருக்க எந்தெந்த கோவில் உண்டியலில் "எவ்வளவு போட்டீர்கள், " என்று கேட்டால் சிபிஐ க்கு புண்ணியமாக போகும்.

பழம் தின்று கொட்டை போட்ட பகுத்தறிவாளர் சொன்னார். "நீங்க எவ்வளவு சொல்லுங்க. அவுங்க திருந்தவே மாட்டாங்க" என்று. உண்மை தான்.

3 comments:

  1. நீங்க எவ்வளவு சொன்னாலும் அவுங்க திருந்த மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு வாய் நல்லா பேச வரும். ஆனா காது அவ்வப்போது கேட்காமல் போய் விடும்.

    ReplyDelete
  2. பாலா,

    காதை போல கண்ணும் அப்பப்ப தெரியாம போகும்.

    ReplyDelete
  3. திருத்தவே முடியாது சார் ! அவர்களே திருந்தினால் தான் உண்டு !

    ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.

இடுகைக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களும், வெறுமனே பாரா(தி)ட்டும் பின்னூட்டங்களும் வெளியிடப்படா.

LinkWithin

Related Posts with Thumbnails