.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

March 19, 2012

சாமியார்களும், பகுத்தறிவு த(க)ருமங்களும்...

திராவிட மணி விடுதலைக்கு எழுத விஷயம் ஏதும் சிக்காவிட்டால் - முதல் அமைச்சர் செல்வி.ஜெயலலிதா - யாராவது சாமியார்களிடம், எப்போதோ மாலை வாங்கிய படத்தையோ அல்லது ஆசி வாங்கும் படத்தையோ போட்டு - அண்ணா.தி.மு.க வா, அக்ரஹார தி.மு.க வா என்று எழுதி பக்கத்தை நிரப்பும். வாரத்திற்கு ஒரு செய்தி இப்படி என்கிற விகிதத்தில் வரும். "தங்களை பகுத்தறிவாளர்கள்" என்று காட்டி கொள்ள வேண்டாமா?

பதிவில் இணைத்துள்ள மற்றொரு படத்தில் ஜெயலலிதாவை போல பதவிசாய் இருக்கும் பெண்மணி யார்? பாவம், அரைவேக்காடு திராவிட மணிகளுக்கு தெரியாது. நாம் தான் எடுத்து கொடுக்க வேண்டும். நாத்திகப்புலி, பெரியாரின் போர்வாள், அண்ணாவின் அருமை தம்பி, இனமான, மானமிகு கி.வீரமணியின் தோழர் - ​சாட்சாத் கலைஞரின் அருமை மனைவி ராசாத்தி அம்மாள் தான்.

 நாம் இந்த இரண்டு படத்தையும் ஒரு பகுத்தறிவு திலகம், திராவிட மணியிடம் கொடுத்து கொஞ்சம் "உண்மைகளை" பேச சொன்னோம். அந்த திராவிட செம்மல், பெரியார் தம்பி "ஜெயலலிதாவின் படத்தில் மூன்று சாமியார்கள் இருக்கிறார்கள்... ராசாத்தி அம்மாள் அவர்களின் படத்தில் ஒரே ஒரு சாமியார் இருக்கிறார்" என்றார். அந்த பகுத்தறிவு பு(எ)லி நாம் "ஆறு வித்தியாசங்கள்" கேட்பதாய் நினைத்து கொண்டது போலும். நம்மையே கிறுக்கனாக்கி, எவ்வளவு அழகான உண்மையை சொல்லிவிட்டார். புல்லரிக்கவில்லை.

இப்படி எல்லாம் உண்மையை மறைக்கவும் அவர்களால் தான் முடியும். இது தான் பகுத்தறிந்து ஈரோடு கண்ணாடி போட்டு கருத்து சொல்கிற லட்சணம் போலும். "கண்ணாடி சரியில்லையா அல்லது கண்ணாடி கடை சரியில்லையா..." என்று மானமிகு அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் தான் வைக்க வேண்டும். "ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முனைந்த" அந்த பகுத்தறிவே பகுத்தறிவு. மேல் நாட்டு பகுத்தறிவாளர்களும் பொறாமைப்படும் பகுத்தறிவு. ஆனால் என்ன. அகில உலக பகுத்தறிவு மாநாட்டுக்கெல்லாம் செல்கிறார்கள் நம்ம ஊர் பகுத்தறிவாளர்கள். போன இடத்தில் அந்த ஊர் பகுத்தறிவாளர்களை கெடுக்காமல் இருந்தால் சரி. பிறகு அவன்களும் - நம்ம ஊரு பகுத்தறிவாளர்களை போல, மதத்துக்கொரு நீதி உரைக்க துவங்கிவிடுவார்கள்.

 இந்த பகுத்தறியும் லட்சணம் - அப்பாவி திராவிட கழக தொண்டனுக்கு மட்டும் உரித்தானதல்ல. திராவிட கழக தலைமையும் இந்த லட்சணத்தில் தான் உள்ளது. சரி... தலைவர் எவ்வழியோ, அவ்வழி தானே தொண்டனும் போவான். பார்ப்பன ஜெயலலிதா சாமியாரிடம் மாலையும் மரியாதையும் பெறுவது ஆச்சர்யமில்லை. அதை விமர்சிக்க எந்த பயலுக்கும் அருகதையும் இல்லை... தைரியமும் தேவை இல்லை. நாத்திகம் பேசி பேசியே முக்கால் நூற்றாண்டை கழித்தவரின் துணைவி - இப்படி சாமியாரிடம் ஆசிர்வாதம் பெறுவது அசிங்கம் என்று ஈரோடு கண்ணாடி போட்டும் - அந்த திராவிடத்தின் க(த)ருமத்துக்கு தெரியவில்லை அல்லது தெரியாத மாதிரி காட்டி கொள்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

ராசாத்தி அம்மாள் அவர்களின் பக்தியை நாம் குற்றம் சொல்லவில்லை. ஒரே காரியத்தை இரண்டு பேர் செய்கிறார்கள். ஒன்றை அழகாக(?) பார்க்கிறார்கள். ஒன்றை அழுக்காக பார்க்கிறார்கள்..இந்த மகா யோக்கியர்கள் தான் முட்டாள்தனமாக முதல்வர் ஜெயலலிதாவை சாடுகிறார்கள். ஆத்திகர்களை முட்டாளாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு - கடைசியில் இவர்கள் தான் படுமுட்டாளாய் இருக்கிறார்கள். இப்படி படுமுட்டாளாய் இருப்பது தான் பகுத்தறிவு போலும். அவர்களின் கட்டுரையில் ஒரு பகுதி.

 "தமிழ்த் தேசியவாதிகள் என்ற போர்வையில் திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது.திராவிட என்ற இனவழிப் பெயரைத் தன் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கிற, திராவிட இயக்கத்தின் தளபதியாக விளங்கிய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் பறக்க விட்டுக் கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க.வோ ஆரியத் தலைமையின் கீழ் திராவிட இயக்கத்தின் கோட்பாடு எனும் வேரின் மீது கோடரியைத் தூக்கி வீசிக் கொண்டிருக்கிறது." என்கிறது.

அண்ணாதுரை ஆரம்பிக்காத கழகம் அண்ணா.தி.மு.கழகம். அதனால் - அது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்று சொல்கிற யோக்கியதை - எம்.ஜி.ஆரை தவிர வேறு எவருக்கும் இல்லை. பெரியார் படத்தை போட்டு கொண்டு சாதி கட்சி நடத்துவதை விட, இது ஒன்றும் கேவலமில்லை. அண்ணா பெயரில் இருக்கிற கழகத்தை விட - அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்ட கழகத்தின் காணக் கிடைக்கிறதே - இந்த காட்சி. இது தான் அண்ணா கட்சி ஆரம்பித்ததற்கு கண்ட பலன்.

எத்தனை முறை தான் சொல்வது. புத்தி சொல்வதற்கான யோக்கியதையை முதலில் கை வரப்பெற்று - பிறகு வாயை திறவுங்கள். இல்லையென்றால் நாறிப் போகுமே. தமிழ் தேசியம் பேசுபவர்களை பழிக்காதீர்கள். சில தினங்களில் தெரிந்துவிடும் - திராவிடம் பேசுபவர்கள், மத்தியில் ஆட்சியில் இருந்து விலகவே மாட்டார்கள் என்பது. முதலில் "கொள்கையை" கைவிட்டார்கள். பிறகு "தமிழர்களை" கைவிட்டார்கள். எதை கைவிட்டாலும் பதவி ஆசையை கைவிட மாட்டார்கள். "இடுப்பில் உள்ள வேட்டி போனால் என்ன. தோளில் உள்ள துண்டை பத்திரமாக பார்த்து கொள்வது தானே "ராஜதந்திரம்".அதுவும் வீராவேச மணிகளுக்கு தெரியும் தானே. குப்பையை அகற்ற வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டால் அதை ஒழுங்காக அகற்றுங்கள். "குப்பையில் நல்ல குப்பை, கெட்ட குப்பை என்று எங்கும் கிடையாது" அதை புரிந்து கொள்வது நல்லது. இல்லை - இது தானய்யா திராவிட தர்மம் என்றால், அவை நமக்கு தர்மமாக படாது - கருமமாக தான்ப்படும். ஒரு எழுத்து தானே வித்தியாசம். போனால் போகிறது என்கிறீர்களா?
தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

 1. //சில தினங்களில் தெரிந்துவிடும்.//

  ம்.

  ReplyDelete
 2. உண்மையான பகுத்தறிவு எது?
  மக்கள் ஏன் சாமியார்களை நாடுகிறார்கள் என்று கேள்வி கேட்டு ஆராய்ந்த அதற்கான உளவியல் இன்னும் பல காரணங்களை கண்டு அறிந்து, இயக்க நடவடிக்கைகள் மூலம் கலைவதுதானே. ஆனால் அவர்கள் பகுத்தறிவு அளவுகோள் பார்ப்பன அழிப்பு மட்டுமே என்றால் அது பகுத்தறிவு ஆகாது.

  ////எத்தனை முறை தான் சொல்வது. புத்தி சொல்வதற்கான யோக்கியதையை முதலில் கை வரப்பெற்று - பிறகு வாயை திறவுங்கள். இல்லையென்றால் நாறிப் போகுமே. தமிழ் தேசியம் பேசுபவர்களை பழிக்காதீர்கள். சில தினங்களில் தெரிந்துவிடும் - திராவிடம் பேசுபவர்கள், மத்தியில் ஆட்சியில் இருந்து விலகவே மாட்டார்கள் என்பது. முதலில் "கொள்கையை" கைவிட்டார்கள். பிறகு "தமிழர்களை" கைவிட்டார்கள். எதை கைவிட்டாலும் பதவி ஆசையை கைவிட மாட்டார்கள். "இடுப்பில் உள்ள வேட்டி போனால் என்ன. தோளில் உள்ள துண்டை பத்திரமாக பார்த்து கொள்வது தானே "ராஜதந்திரம்".//////

  நச்

  ReplyDelete
 3. இப்படி நீங்கள் லாஜிக்காக கேள்வி கேட்டால் என்ன செய்வார்கள்? வழக்கம்போழ 1950, 60ன்னு கதை சொல்வார்கள். இல்லை அகநானூறு, புறநானூறு என்று வசனம் பேசுவார்கள்.

  ReplyDelete
 4. பாலா said...
  இப்படி நீங்கள் லாஜிக்காக கேள்வி கேட்டால் என்ன செய்வார்கள்? வழக்கம்போழ 1950, 60ன்னு கதை சொல்வார்கள். இல்லை அகநானூறு, புறநானூறு என்று வசனம் பேசுவார்கள்..//////

  பேசித்தானே ஆகணும். அப்பத்தானே பொழைப்பு நடத்த முடியும் இல்ல பகுத்தறிவு கோவிச்சுக்குமே.

  ReplyDelete
 5. நாம் இந்த இரண்டு படத்தையும் ஒரு பகுத்தறிவு திலகம், திராவிட மணியிடம் கொடுத்து கொஞ்சம் "உண்மைகளை" பேச சொன்னோம். அந்த திராவிட செம்மல், பெரியார் தம்பி "ஜெயலலிதாவின் படத்தில் மூன்று சாமியார்கள் இருக்கிறார்கள்... ராசாத்தி அம்மாள் அவர்களின் படத்தில் ஒரே ஒரு சாமியார் இருக்கிறார்" என்றார். அந்த பகுத்தறிவு பு(எ)லி நாம் "ஆறு வித்தியாசங்கள்" கேட்பதாய் நினைத்து கொண்டது போலும். நம்மையே கிறுக்கனாக்கி, எவ்வளவு அழகான உண்மையை சொல்லிவிட்டார். புல்லரிக்கவில்லை..//////

  அண்ணே அது தான் இனமான பகுத்தறிவு.

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails