.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

April 3, 2012

சங்கராச்சாரியாருக்கு சொன்னது - திராவிடத்துக்கும் பொருந்திய பரிதாபம்...

விடுதலையில் வந்த ஒரு செய்தியும், அது குறித்த விமர்சனமும் சங்கராச்சாரியாருக்கு புத்தி புகட்டும் விதமாக அமைந்திருந்தது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் - உடனடியாக திராவிட கலகங்களின் வேறு சில செய்திகள் - உடனடியாக ஞாபகத்திற்கு வந்து நெருடல்களை ஏற்படுத்தி, அது அவர்களுக்கே பொருந்திய பரிதாபத்தை என்னவென்று சொல்வது. விடுதலையில் வந்த செய்தியை முதலில் பார்ப்போம்.

விடுதலையை வாசித்து கொண்டிருந்தபோது - அந்த செய்தி கண்ணில்பட்டது . "அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது. சிறுவயதிலே நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
- காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேட்டி காமகோடி ஏப்ரல் 2012.

விடுதலையின் சிந்தனை: அய்ந்து வயதில் இந்த இருள் நீக்கி சுப்பிரமணியனுக்கு நல்ல ஒழுக்கத்தை அவர்கள் கற்றுக் கொடுத்திருந்தால் இந்த வயதில் 61 நாள் சிறையில் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காதே!" என்று பரிதாபப்பட்டு கேட்டிருந்தது விடுதலை ஏடு. மிக சரியான கருத்தை தான் விடுதலை வெளியிட்டிருக்கிறது. பகுத்தறிவு சொன்னால் தப்பு இருக்குமா?

ஐந்தில் ஒருவன் ஒழுக்கத்தை கற்றால் - ஏன் ஐம்பது வயதில் பாலியல் சர்ச்சையில் சிக்குகிறான்... கொலை பாதக செயலில் ஈடுபடுகிறான்... அவன் முற்றும் துறந்த சாமியாராக இருந்தால் தான் என்ன. ஒழுக்கமில்லை எனில் சிறைச்சாலை தானே. ஒரு வேளை சங்கராச்சாரி - பெரியாரை பார்த்து பகுத்தறிவாதி ஆகி இருந்தால் கொலை பாதக செயலில் ஈடுபட மனம் வந்திருக்குமா? ஒழுக்கமான மனிதனாய் இருந்து இருக்க வாய்ப்பில்லை?
பகுத்தறிவு பகுத்தறிவு தான் என்று நினைத்தவாறே விடுதலையை திருப்பினால் - அந்த செய்தி கண்ணில்பட்டது.திருச்சியில் பரபரப்பு! திருச்சி, மார்ச் 29- தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (50) கடத்தி கொல்லப்பட்டார். திருச்சி கல்லணை ரோட்டில் 8ஆவது கிலோ மீட்டரில் உள்ள திருவாடைசோலை என்ற இடத்தில் ராமஜெயம் உடல் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். ராமஜெயத்தின் இரண்டு கைகளையும் கால்களையும் கம்பியால் கட்டி, செல்லோ டேப்பால் ஒட்டி போர்வையால் மூடியிருந்தது. காவல் துறையினர் உடலை பறிமுதல் செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்ற செய்தியை வாசித்தவாறு, தொடர்ந்து இணையத்தை மேய்ந்தபோது -

வாக்கிங் சென்றபோது தம் சொந்த கட்சிக்காரர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட தி.மு.க.,வை சேர்ந்த தா.கிருஷ்ணன் குறித்த செய்தியை காண முடிந்தது. அடுத்தடுத்த பக்கங்களில் ஆ.ராசா சிறை சென்று ஒரு வருஷம் ஆனதை வாசிக்க முடிந்தது. ஜாமினில் வெளியே வந்திருக்கும் கனிமொழி தம்மை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு குறித்த செய்தியையும் வாசிக்க நேர்ந்தது. தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைதான திராவிட பங்காளிகளின் பட்டியலை காண நேர்ந்தது.

"எங்கும் குற்றம் எதிலும் குற்றமாக உள்ளதே". நாமென்னவோ சங்கராச்சாரியார் மட்டுமே "ஐந்தில் வளையாமல் ஐம்பதில் தவறு செய்து மாட்டிக் கொண்டு முழிக்கிறார் போலும்" என்று தப்பிதமாக நினைத்து கொண்டிருந்தோம். நம் பகுத்தறிவு தலகளும் அப்படி தான் நமக்கு பாடமெடுத்திருந்தன. மற்றவர்கள் எல்லாம் யோக்கியம் என்பது போல... ஆனால் கண்களை நன்றாக திறந்து பார்த்தால் - சங்கராச்சியாருக்கே இந்த விஷய்த்தில் அப்பன்களும், பாட்டன்களும் இருப்பது தெள்ளத்தெளிவானது. 

பகுத்தறிவு பகலவன் வழியில் வந்த கும்பல்களே - ஐந்தில் வளையாமல் ஐம்பதில் நாட்டுக்கே அலைக்கற்றை ஊழலில் மிக பெரிய ஊழலை செய்து சிறையில் வாடுகிறது. அறுபத்தியொரு நாள் சுப்பிரமணியன் (சங்கராச்சாரி) சிறையில் இருந்ததற்கே பஞ்ச் டைலாக் பேசும் விடுதலை - பகுத்தறிவை ஒழுங்காய் கற்று கொள்ளாமல், பகுத்தறிவின் பேரை, திராவிடத்தின் பெருமையை (?) கெடுக்கும் விதமாக நடந்து கொண்டதற்கு வீரமணி வகையறா பொங்க வேண்டாமா?

அண்ணா தி.மு.க., வை ஆன்மிக தி.மு.க., வாக மாற்றியதற்கு குதிக்கும் பகுத்தறிவு - அண்ணாதுரை ஆரம்பித்த கழகத்தை - ஊழல் கழகமாக மாற்றியதற்கு எவ்வளவு குதித்திருக்க வேண்டும். ஆனால் குதிக்கவில்லையே. ஏன். கருஞ்சட்டைகளிடமும் - ஐந்து, ஐம்பது கோளாறு உள்ளதே.

 "ஐந்தில் ஒருவன் பகுத்தறிவை ஒழுங்காக கற்றிருந்து - நேர்மையாக, அறிவு நாணயத்துடன் எதையும் ஆய்ந்து பகுத்தறிவோடு கற்றிருந்தால் - அவர்களின் அசிங்கமான பகுத்தறிவை அகவை எழுபத்தியெட்டில் ஒருவன் இப்படி எல்லாம் கேள்விக்கேட்டு விமர்சிப்பானா? நீங்களும் பதில் சொல்லாமல் முழிக்கின்ற நிலை திராவிட கலகத்துக்கு வந்திருக்குமா"... "சங்கராச்சியாருக்கு சொன்னது - சங்கராச்சாரியாரை விட, தங்களுக்கல்லவா ரெம்ப பொருந்துகிறது" என்று பகுத்தறிவு பங்காளிகள் புழுங்கும் இழி நிலை வந்திருக்காதே.

என்ன செய்வது. பகுத்தறிவு நிஜமான பகுத்தறிவாக இல்லையெனில் இழிவு தான். ஐந்தில் வளையாவிட்டால் - சங்கராச்சாரியாராக இருந்தாலும் சரி, கருஞ்சட்டையாளராக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி - ஐம்பதில் சிக்கல் தான். இதை பகுத்தறிவு, பகுத்தறிவோடு உணர்ந்தால் நல்லது "அவாள் குற்றம், இவாள் குற்றம்" என்று பிரித்து பார்க்காமல்.
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

 1. good post,

  இப்படி தான் ஊருக்குள்ள நிறைய பேர் பகுத்தறிவாதின்னு சொல்லிக்கிட்டு திரியறாங்கே.

  ReplyDelete
 2. பகுத்தறிவு கலக கண்மணிகள் ஐந்து வயதில் வளைந்து சொல்லி தந்ததை ஐம்பது வயதில் வளைந்து கச்சிதமாக செய்வதால், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற தத்துவம் அவர்களுக்கு சரியாக பொருந்துவதால், விடுதலை அவர்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை போல?

  ReplyDelete
 3. நரேன்,

  தங்களின் கருத்து மிக சரியே. வருகைக்கு நன்றி நரேன், அனானி.

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails