நக்கீரன் இணையத்தளத்தில் மருத்துவர் ராமதாஸ் கூறியதாக இருந்த - அந்த செய்தி ஆச்சர்யத்தை தந்தது. "படம் எடுத்தேன்: 5 நாள்கள் கூட ஓடவில்லை" என்கிற தலைப்பில் வந்த செய்தி. சினிமாவையும், சினிமாக்காரர்களையும் வெறுக்கும், எதிர்க்கும் மருத்துவரய்யா படமெடுத்த தகவல் ஆச்சர்யமான விஷயம் தானே. தொடர்ந்து அந்த செய்தியை முழுமையாக வாசித்தேன்."தமிழ்நாடு தமிழருக்கே' என்ற தலைப்பிலான குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை மக்கள் மாநாடு கட்சித் தலைவர் சக்திவேல் தயாரித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் வீ.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் குறுந்தகடை வெளிட்டு பேசிய மருத்துவர் ராமதாஸ்,
"தமிழை அழிக்கும் முயற்சியில் ஊடகங்கள் இறங்கியுள்ளன. ஒருவர் பத்து வார்த்தைகள் பேசினால் அதில் எட்டு ஆங்கில வார்த்தைகளாக உள்ளன. ஆங்கில மொழியால் தமிழ் சிதைகிறது. "இலக்கணம்" என்று ஒரு படம் எடுத்தேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் முழுமையும் தமிழ் வசனங்களாகவே இடம்பெற்ற திரைப்படம் அது. ஆனால் அது ஐந்து நாள்கள் கூட ஓடவில்லை.
எனவே, மொழியைக் காக்க, தமிழ் தேசியத்தை கட்டமைக்க தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்த அமைப்பு இருக்க வேண்டும். நான் முன் நின்று ஒருங்கிணைத்தால் ஏதோ அரசியல் ஆதாயத்துக்காக செய்வதுபோல இருக்குமோ என்ற தயக்கம் இருக்கிறது. இருப்பினும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்" என்றார் ராமதாஸ்.
ஆக, நடிகர்கள் அரசியலுக்கு வருவது தான் தவறு... அரசியல்வாதிகள் படமெடுத்தால் தவறில்லை என்கிறாரா? பா.ம.க தலைவர் ஜி.கே.மணியின் மகன் பிரபல நடிகரை வைத்து மசாலா படமெடுக்க போவதாக இணையத்தில் வாசித்தேன். திரைப்படங்கள் எடுத்து, அதன் மூலம் நல்ல கருத்துகளை சொல்ல அரசியல்வாதிகள் விரும்புவது போல, அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய திரைக்கலைஞர்கள் விரும்பக்கூடாதா? மருத்துவர் ராமதாஸ் தான் தயாரித்தாக சொன்ன "இலக்கணம்" திரைப்படத்தை பார்க்கின்ற பாக்கியம் (?) எனக்கு மக்கள் தொலைக்காட்சி வாயிலாக கிடைத்திருந்தது.
ஏதோ ஒரு பண்டிகை, விடுமுறை தின (ஆக.15 என்று நினைக்கிறேன்) சிறப்பு படமாக "இலக்கணம்" திரைப்படத்தை ஒளிபரப்பினார்கள். விரும்பி பார்க்கும் தொலைக்காட்சிகளுள் மக்கள் தொலைக்காட்சியும் ஒன்று என்பதை மறைக்க விரும்பவில்லை. தற்செயலாக அன்றைக்கு மக்கள் தொலைக்காட்சி பக்கம் சென்ற போது - இலக்கணம் திரைப்படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. சீரியலோ என்று நினைத்தால் - அது திரைப்படம். முக்கால்வாசி படம் பார்த்தேன்.

மக்கள் தொலைக்காட்சியில் தமிழ் படங்களோ, தமிழ் திரைப்படங்களின் டிரெய்லர் கூட ஒளிபரப்ப மாட்டார்கள். சினிமா நடிகர்கள் குறித்த நல்ல விதமான செய்திகளை சொல்ல மாட்டார்கள். ஆனால் "சினிமா நடிகர்கள் தப்பு தண்டா செய்து சிக்கும் செய்திகளை மட்டும் சொல்வார்கள்". இது ஊடக தர்மமா? இலக்கணம் படம் பற்றி பார்ப்போம். படம் முழுக்க சுத்தத்தமிழில் பேசினார்கள். கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் தூய தமிழ் பெயர்கள்.
"கொலவெறி" கோலோச்சும் காலத்தில் - மருத்துவரய்யா சொன்னது போல, "ஐந்து நாள் கூட ஓடி இருக்க வாய்ப்பில்லை" தான். காரணம்? படம் ரிலீஸாகி இருந்தால் தானே. திண்டிவனத்தில் மட்டும் ரிலீஸாகி இருக்குமோ? எனக்கு தெரிந்து அந்த படம் ரிலீசான மாதிரி தெரியவில்லை. "பாபா படத்தை வெளியிடக்கூடாது" என்று மிரட்டிய மாதிரி, "இலக்கணம் படத்தை வெளியிடச் சொல்லி" மிரட்டி இருந்தால், "ஐந்து நாட்கள்" ஓடி இருக்கலாம்.
படத்தின் நாயகன் வழக்கம் போல ஒரு நேர்மையான பத்திரிகை யாளனாக - அந்த பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேருகிறான். தேவையே இல்லாமல் கட்டுரைகளுக்கு இடையே கவர்ச்சி படங்கள் போடுவதை - பத்திரிகை ஆசிரியரிடம் எதிர்க்கிறான். பத்திரிகை ஆசிரியராக சுப.வீ நடித்திருந்தார். காடுவெட்டி குருவா என்று தெரியவில்லை. அவரது சாயலில் உள்ள ஒருவர் நாயகனின் மாமாவாக நடித்திருந்தார். நாயகனின் அக்காவாக தொலைக்காட்சி தொடர் நடிகை, எல்லோருமே படத்தில் ரெம்ப நல்லவர்களாக இருந்தார்கள்.
நாயகியில் இருந்து யார் பெயரும் தெரியவில்லை. வழக்கம் போல சட்டத்துக்கு புறம்பான காரியங்கள் செய்பவர்கள் குறித்து, வழக்கம் போல நாயகன் எழுத - வழக்கம் போல எதிரிகள் அடிக்க என்று வழக்கமான ஒரு திரைப் படமே. எத்தனை ஊடகவியலாளர்களை இவர்கள் தாக்கி இருப்பார்கள். தூய தமிழில் பேசுவதால் மட்டும் அவை சிறப்பான படம் என்கிற அந்தஸ்த்தை பெற்றுவிடுமா?
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களை தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலே - தமிழ் மொழியையும், நல்ல பழக்க வழக்கத்தையும் வாழ வைப்பதாக ஆகாதா? இலக்கணம் படத்துக்கு விகடன் விமர்சனம் எழுதி இருந்தால் முப்பத்திஐந்து மார்க் போட்டிருக்கலாம். திருமாவை போலவே, ராமதாஸும் யாரையோ பார்த்து திரை உலகில் சூடு போட்டு கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். அரசியல் உலகில் தங்கள் கட்சிகளுக்கு விழும் வெற்றிடத்தை நிரப்ப - எல்லா கட்சிகளும் ஏதாவது ஒரு போராட்டத்திற்கென்று காப்புரிமை பெற்றுள்ளன.
அந்த வகையில் பா.ம.க "தமிழை காக்க" காப்புரிமை பெற்றுள்ளது. சென்ற முறை தமிழை காக்க ஒரு அமைப்பு ராமதாஸால் துவங்கியபோது அதில், "திருமாவளவன், சீமான் போன்றவர்கள் இருந்தார்கள்". இப்போது "தமிழை காக்க" ராமதாஸுடன் அவர்கள் இல்லை. அதற்கு பதிலாக,
புதிதாய் மக்கள் மாநாடு கட்சி தலைவர் சக்திவேல், இயக்குனர் வீ.சேகர், தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் போன்றவர்கள் சிக்கி உள்ளனர்.
தம் மகனை ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவர் - இனி "தமிழ், தமிழ்" என்றும் "சமச்சீர் கல்வி" என்றும் பேசினால் யாரும் நம்புவார்களா? பொதுமக்கள் சிரிக்க மாட்டார்களா? இனி தமிழை கை(வா)யில் எடுத்து கொண்டு யாரும் பிழைப்பு நடத்த முடியாது. மக்கள் விழித்து கொண்டார்கள். படமெடுக்க மட்டுமல்ல, அரசியலும் கூட தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நம்மை முட்டாள் ஆக்கும் கூகுள் !
ReplyDeleteRead This Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/profit-sharing-phenomenon.html
ராமதாசோ, திருமாவோ தூயவர்கள் அல்லர். இருக்கும் பெரிய கட்சித் தலைவர்கள் போல் அதே சேற்றில் விழுந்தவர்கள் தாம்.
ReplyDeleteஆனால்,
இலக்கணம் என்ற திரைப்படம் நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம். மணிரத்னம், சங்கர், கவுதம் படங்கள் போன்ற அழகிய திரைமொழி ஏதும் அப்படத்தின் இயக்குனர்க்குக் கைகூடவில்லையெனினும், மொக்கையாக வரும் பல படங்களை விட மேலாக இருந்தது. வெறுமனே ராமதாசைத் தாக்குவதுக்குப் பதிவு எழுதி அதில் இலக்கணத்தையும், கூடவே தமிழ்த் தொலைக்காட்சிகளில் உருப்படியாக இருக்கும் மக்கள் தொ.காவுக்கும் ஒரு இடி கொடுத்து வளைத்தெழுதியிருக்கும் உங்கள் நுட்பம் யாருக்கும் வராது தான். இந்தப் பதிவில் விமர்சனம் தெரியவில்லை வெறும் காழ்புணர்வு தான் மேலோங்கி கிடக்கிறது.
என் கருத்தும் இதுவே! தமிழ் மட்டுமே பேசினால் எப்படி இருக்கும் என்று கனவில் மட்டுமே கற்பனை செய்து பார்க்கும் பலரில்,, அதை 2மணி நேர திரைப்படமாக எடுத்த மருத்துவர் அய்யாவைப் பாராட்டாவிட்டாலும் தூற்றிப் பேசுவது அபத்தம் ஆகும்!
Deleteஅனானி,
ReplyDeleteஎனக்கு பிடித்த தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி என்பதை குறிப்பிட்டுள்ளேன் - பதிவில். தமிழ் மீது பற்று என்று சொல்லி கொண்டே - அதில் இழையோடும் அவர்களின் முரண்பாடுகளை பற்றிய உண்மைகளை சொன்னால் காழ்ப்புணர்ச்சி என்கிறிர்கள்.