.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

April 19, 2012

இதை தான் காதல் என்பதா? மனநோயாளியின் கதை.

இன்றைக்கு மனிதர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு - மனநிலை பாதிக்கப்படுகிற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மன அழுத்தங்கள் ஏற்பட சில நேரம் நாமே காரணமாகிறோம். பல நேரம் வேறு எவரேனும் காரணகர்த்தாவாகிறார்கள். மன அழுத்தத்தில் இருந்து - இன்று நம்மை காத்து கொள்ள நிறைய நிறைய போராட வேண்டி உள்ளது. மன அழுத்தம் நிகழ்வதற்கான காரணங்கள் எங்கும் நிரம்பிவழிகிறது.

சிறு சிறு விஷயங்களை கூட, மனதில் போட்டு மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இது போக நம் அன்றாட கடமைகளே - சில நேரங்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிகப்படியான கல்வி சுமை மாணவர்களையும், அதிகப்படியான பணி சுமை தொழிலாளர்களையும் - மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.

இங்கே ஒரு மனிதர் தம் மனைவி மீது அதீத காதல் கொண்டிருந்தார். சந்தேகம் என்னும் தீயில் விழுந்து மிக பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். மனைவி பிரிகிறார். தாங்க முடியாத பிரிவு துயர் அவர் மனநிலை பிறழவும் காரணமானது. "மனைவி மீதோ, காதலி மீதோ பைத்தியமாக இருக்கிறேன்" என்று யாரேனும் சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இங்கே ஒருவர் மனைவி மீதான் அன்பால் பைத்தியமாகவே ஆகிவிட்டார்.

ஒரு மனநோயாளியின் கதையை வாசியுங்கள். தினமலரில் வந்தது.

மேலூர்: சந்தேகப்பட்ட கணவனை விட்டு மனைவி பிரிய, அவரை நினைத்து மனநலம் பாதித்த கணவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே 2 ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் பரிதாப காட்சி தினமும் நடக்கிறது.

விருதுநகர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., இயற்பியல் படித்தவர் ஜோன் ராஜ்,35. கராத்தேவில் "பிளாக் பெல்ட்' பெற்றவர். மனைவி மீது தீராத காதல் கொண்ட ஜோன்ராஜூற்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இரு ஆண்டுகளுக்கு முன், மதுரை மேலூர் அருகே வெள்ளரிபட்டி தனியார் நிறுவனத்திற்கு ஜோன்ராஜின் தந்தைக்கு மாறுதல் கிடைக்க, நிறுவன குடியிருப்பில் அனைவரும் தங்கினார்.

இங்கு மனைவி மீது ஜோன் ராஜூக்கு சந்தேகம் ஏற்பட ஆரம்பித்தது. அது பூதாகரமாக வெடிக்க, குழந்தையுடன் மனைவி தாய் வீட்டிற்கு சென்றார். அன்று முதல் ஜோன் ராஜூக்கு மனநலம் பாதிக்க ஆரம்பித்தது. "மனைவி எப்படியும் திரும்பி வருவார்' என கருதி, தினமும் விதவிதமான ஆடைகள் மற்றும் ஷூ அணிந்து, கத்தப்பட்டி டோல்கேட்டிற்கு வந்துவிடுகிறார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுக் கொண்டு, வாகனங்களில் மனைவி செல்கிறாரா என உற்றுப் பார்த்து தனக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார். வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல், நினைத்த நேரத்தில் இங்கே வந்துவிடுவார். இம்மனிதனின் சந்தேக கோடு, சந்தோஷ கேடாக மாறி போனது பரிதாம்தான்.

இன்றைக்கு கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் சந்தேகம் கொள்வது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அதன் காரணமாக படுகொலைகள் வரை சென்று விடுகிறார்கள். இன்னும் சிலரோ மனதுக்குள்ளேயே போட்டு வைத்து மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இந்த செய்தி நாயகனும் அவ்வாறே ஆகி மன நோயாளி ஆகிறான்.இன்பமோ, துன்பமோ - சாதகமோ, பாதகமோ பிரச்சனைகளை வாய் திறந்து பேசுங்கள். பேச வேண்டிய நேரத்தில் மௌனமாயும், மௌனமாய் இருக்க வேண்டிய நேரத்தில் பேசி விடுவதுமே பிரச்சனைகளுக்கு காரணங்கள். பேச வேண்டிய நேரம் பேசுங்கள். தீர்வு பெறுங்கள். வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள்.
தொடர்புடைய பதிவுகள் :


0 comments:

Post a Comment

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails