.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

April 20, 2012

சட்டத்தை மதிக்கும் அமெரிக்காவும், மிதிக்கும் இந்தியாவும்...

ஷாரூக்கான் மற்றும் அமெரிக்கா குறித்த எனது "ஷாரூக்கான் - அமெரிக்கா செய்வது சரியா?" பதிவுக்கு ஒரு அனானி - மிக மோசமாக, அநாகரீகமாக கருத்துகளை வெளியீட்டு இருந்தார். நாகரீகம் கருதி அதை வெளியிடவில்லை என்ற போதிலும் பிற பின்னூட்டங்கள் கருத்து செறிவுடன் இருந்தன. சில பின்னூட்டங்களை வாசிக்கும்போது, நாம் நம் கருத்துகளை இன்னும் ஆழமாக, எதிர்மறையாளருக்கு உரைக்கும்படி சொல்லி இருக்க வேண்டுமோ என்று தோன்றும்.

அந்த வகையில் அந்த பதிவில் எழுதாமல் விட்ட, பதிவிட்டப்பின் ஞாபகத்திற்கு வந்த சில விஷயங்களை மீண்டும் இங்கே பதிய விரும்புகிறேன். பாதுகாப்புக்காக ஒவ்வொரு நாடும் மிக பெரிய தொகையினை செலவு செய்கிறது. இதில் ஏழை நாடு, பணக்கார நாடு என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. நாட்டின் பாதுகாப்புக்காக தனி துறை... மேலும் பாதுகாப்பு என்கிற ஒரு அம்சத்திற்காகவே அரசு பலவிதமான சட்டங்களை இயற்றுகிறது.

அந்த சட்டங்களை மக்கள் பின்பற்றி நடக்க மட்டுமல்ல - அரசும் செம்மையாக பின் பற்ற வேண்டி உள்ளது. ஆனால் அமெரிக்காவை போல, அரபுலகம் போல எந்த சட்டங்களாவது இந்தியாவில் செம்மையாக பின்பற்றப்படுகிறதா? இந்தியாவின் ஒழுங்கற்ற தன்மைக்கு அனைவரும் அறிந்த ஒரு சம்பவமே உதாரணம்.

சில வருஷங்களுக்கு முன்னால் - அரபு நாடொன்றில் பணிபுரிந்த தமிழர் - அங்கே உள்ள ஒரு பணக்காரரி ன் மகளை காதலித்திருக்கிறார். அந்த பெண்ணும் விரும்பி இருக்கிறார். அங்கே இவர்களின் காதலை - பெண்ணின் பெற்றோர் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதால் இந்தியாவுக்கு பறந்தாக வேண்டும். அந்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் கிடையாது. இந்தியாவிலிருந்து பணிக்கு சென்றிருந்த ஒரு பெண்ணின் பாஸ்போர்ட்டை எடுத்து - போலியாக அந்த பெண்ணுக்குரியதாக்கி இந்தியாவுக்கு பறந்து வந்து விட்டார்கள்.

முறைகேடாக வந்தது மறக்கப்பட்டு -இந்த காதல் பறவைகளின் கதை மட்டும் சகல ஊடகங்களிலும் பரபரப்பாக அன்றைய நாளில் எழுதப்பட்டது. தமிழக அரசும் அட்சதை தூவியது. ஆனால் போலி பாஸ்போர்ட் காரணமாக அந்த பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் எனில் நாமென்ன அமெரிக்காவா? அல்லது அரபுலகமா? சட்டத்தை கண்ணும் கருத்துமாக பின்பற்ற. வல்லவர்களாயிற்றே சட்டத்தை மிதிப்பதில்.

இதே மாதிரி, இதே காரியத்தை செய்து ஒருவன் வெளிநாட்டிற்கு தப்பி இருந்தால், பத்து வருஷமோ, இருபது வருஷமோ 'உள்ளே' இருந்தாக வேண்டும். அப்போது, இந்த விஷயம் குறித்து ஒரு வழக்கறிஞர் சொன்னார். "போலி பாஸ்போர்ட் மூலம் வந்த இவரை நாமொன்றும் செய்யவில்லை. ஆனால் இந்த பெண்ணிடம் தம் பாஸ்போர்ட்டை இழந்த அந்த பெண் - அங்கே என்ன பாடுபடப்போகிறாரோ" என்று. "அந்த பெண் பாஸ்போர்ட்டை எடுத்ததற்கு பாவம் இந்த பெண் என்ன செய்வாள்" என்று அந் நாட்டு அரசு மடத்தனமாக - இந்தியாவை போல, எந்த விசாரனைக்கும் உட்படுத்தாமல் அந்த பெண்ணை திருப்பி அனுப்பி இருக்குமா?

அந்த பெண்ணின் நிலை என்னவாயிற்றோ. சட்டத்தை மிதிப்பதில் இந்தியாவுக்கு நிகர் இந்தியா தான். இது ஒரு உதாரணம் தான். நிறைய சொல்லலாம் "குதிரை ஓடிய பின் லாயத்தை மூடிய கதையை" எல்லா சட்டங்களும் மீறப்படுவதற்கு என்றால் - பிறகெதற்கு சட்டங்களை இயற்ற வேண்டும். இத்தகைய நம் அரசு தான் - ஷாரூக்கான்னுக்கு அநீதி நேர்ந்துவிட்டது என்று துள்ளி குதிக்கிறது.

தமிழக காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா - இந்தியாவுக்கு சுதந்திரமாய் வந்து போனதை பார்த்து கொண்டிருந்த கையாலாகாத அரசு தான் - அமெரிக்காவின் சோதனையில் தம் மானம் கப்பலேறிவிட்டது என்று கூக்குரல் இடுகிறது. தாம் இயற்றும் சட்டத்தை அரசே முதலில் மதித்து நடக்கட்டும். சட்டத்தை மதிப்பவர்களுக்கு - எந்த சோதனைகளும் அவமானகரமானதாக தெரியாது.இந்தியா - எல்லா விஷயத்திலும் பின்தங்கி உள்ளது போல, சட்டம் ஒழுங்கை காப்பதில், பின்பற்றுதலிலும் பின் தங்கி உள்ளது.
இந்த பதிவு, வெறுமனே - சில முற்போக்குகளை போலவோ, சில மதவாதிகளை போலவோ- இந்தியாவை இடித்துரைக்க வேண்டும் என்றோ அல்லது திட்டி தீர்க்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது "இந்தியாவை விட எல்லா விதத்திலும் அவன் தான் உசத்தி" என்று சொல்வதற்காகவோ எழுதப்பட்ட பதிவல்ல. "சட்டத்தை மதித்து நேர்மையாக எம் அரசும் செயல்பட வேண்டும்" என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடினாலேயே இந்த பதிவு.
தொடர்புடைய பதிவுகள் :


7 comments:

 1. சரியாக சொன்னீர்கள். சட்டத்தை மதித்து நடந்தால் பாதி பிரச்சனைகள் தீர்ந்து போய்விடும். அந்த பண்பாட்டை ஏனோ பின்பற்ற மறுக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நரேன்,

   நம் அரசியல்வாதிகள், வி.ஐ.பிக்கள் எவரேனும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களிக்க சென்றதை பார்த்திருப்போம்மா?

   Delete
 2. அனைத்து நாடுகளிலும் சட்டத்தை மீறிய/மீறும் (அரசு ஆதரவு பெற்ற) குடிமக்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அமெரிக்கா மற்றும் அனைத்து மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை வரலாறு தெரிந்தது தான். தாங்கள் சொல்கின்றபடி பார்த்தால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அனைவரும் இப்போது சிறையில் இருக்க வேண்டும். ஏனெனில், அது இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு. நான் ஈழத்தமிழர்களுக்கு எதிரியில்லை. அவர்களைப் பலரும் தங்கள் சுயலாப நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகத் தோன்றுகின்றது.

  ReplyDelete
  Replies
  1. பிற நாடுகளில் விதிமீறல்கள் அரிசியில் கல்... நம் நாட்டில் விதிமீறல்கள் பாலில் கலந்து விட்ட விஷம்...

   Delete
 3. goodluck and keep it up.
  Surya

  ReplyDelete
 4. Sridhar Srinivasan-
  புலி ஆதரவாளர்கள் அனைவரும் இப்போது சிறையில் இருக்க வேண்டும். ஏனெனில் அது இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு. நான் ஈழத்தமிழர்களுக்கு எதிரியில்லை

  எனக்கு சீமானை பிடிக்காது அதற்காக நான் இந்திய தமிழர்களுக்கு எதிரி இல்லை. அல்காயிதாவை பிடிக்காவிட்டால் முஸ்லிம்களுக்கு எதிரியா? ஆனால் தமிழகத்தில் மட்டும் புலியை விமர்சித்தால் இலங்கை தமிழர்களுக்கு எதிரி இல்லை என்று சொல்ல வேண்டும் என்பது விளங்கவில்லை.

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails