.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

April 28, 2012

அக்னி ஏவுகணையும், அக்கப்போர் பேச்சுக்களும்...

இந்தியா அக்னி 5ஏவுகணையை ஏவியது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்கிற புரிதல் கூட இல்லாமல் - வறுமையில், வேலை இல்லா திண்டாடத்தில் இருக்கிற இந்தியாவுக்கு எதற்கு ஏவுகணை சோதனை, அதிக அளவு ஆயுத கொள்முதல் ஏன் செய்ய வேண்டும் என்றெல்லாம் சிலர் புலம்புகின்றனர். அந்த புலம்பல் சரி தானா? அதில் நேர்மை உள்ளதா?

சாமானியன் ஒருவனுக்கே - அரசியல் குண்டர்களிடம் இருந்தும், தெரு பொருக்கிகளிடம் இருந்தும் தன்னை காத்து கொள்ள சற்று ரௌத்ரம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும் போது, மூன்று பக்கம் கடலும், எல்லா பக்கமும் எதிரிகளையும் கொண்டிருக்கிற இந்தியா - தம் பலத்தை அதிகரிக்க நினைப்பதில் தவறொன்றும் இல்லையே. புலம்புபவர்களுக்கு பதிலடி தரும் வகையில் ஒரு பதிவு தர நினைத்தபோது - ஏற்கனவே, அது குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். அதுவே சிறப்பானதாக இருந்ததால் அதையே இங்கு தருகிறேன்.

இந்திய அரசு எது செய்தாலும் - அதில் குற்றம் கண்டுபிடிக்க, குறை சொல்லி மகிழ நம் நாட்டில் ஒரு கூட்டம் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். அந்த அடிப்படையில், இந்தியா ஆயுதங்கள் கொள்முதலில் உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளதையும் - அந்த கூட்டம் விமரிசித்துள்ளனர். முதலில் அவர்களின் விமர்சனத்தை பார்ப்போம். பிறகு நம் கருத்து. "நாட்டில் மிக அதிகமான மக்கள் வறுமை, பசி, பட்டினி என வாழுவதாக மத்திய அரசு தரும் புள்ளி விவரம் எடுத்துரைக்கிறது. அதே நேரம், அதை பற்றி எல்லாம் கவலைபடாமல் நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை மன்மோகன்சிங், சோனியா, சிதம்பரம் கும்பல் மும்முரமாக செய்து வருகிறது.

இதற்கு ஒரு எடுத்துகாட்டு தான் ‘ஆப்பிரிக்காவை விட ஏழைகள் அதிக உள்ள நாடான இந்தியா ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் முதலிடம். இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்துதான் வாங்கி வருகிறது.’ என்று விமர்சித்துள்ளது. பன்னாட்டு முதலாளிகளில் ரஷ்யா இருக்கிறதா என்ன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தானே இந்த கும்பல் எதிர்க்கும். சரி... இந்த விமர்சனத்தில் உண்மை உள்ளது. ஆனால் நியாயம் உள்ளதா? என்று பார்ப்போம்.

ஒரு இளம் பெண் இருக்கிறாள். வறுமையில் வாழ்கிறாள். அவளை சுற்றி காமுகர்கள் வளைய வருகிறார்கள். "அவளை கபளீகரம் செய்ய" அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள கராத்தே கற்று கொள்ள நினைக்கிறாள். அப்போது ஒருவன் - புத்தி கெட்டு அயோக்கியதனமாய் கேட்கிறான். "சோத்துக்கே வழி இல்லாத உனக்கு எதுக்கு கராத்தேயும்... கற்பும்..." என்று.

படித்தவர்களும், பண்புள்ளவர்களும் - நிச்சயம் அவன் வாதத்தை ஏற்றுகொள்வார்களா? "முட்டாள்தனமானது" என்று தான் சொல்வார்கள். அது போல தான் இந்தியாவின் ஆயுத கொள்முதலும். இந்தியா என்ன நாடு பிடிக்கும் ஆசையினாலா ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது அல்லது அடுத்த நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவா ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது. இல்லையே.

அப்படி ஏதேனும் ஆசை இருந்து - இந்தியா ஆயுதங்களை வாங்கி குவித்து இருந்தால் கூட - குறிப்பிட்ட அந்த அசிங்கமான விமர்சனத்தை ஏற்று கொள்ளலாம். நியாயமுள்ளது எனறும் சொல்லலாம். ஆனால் சுட்டு போட்டாலும் நாடு பிடிக்கும் ஆசை வராதே இந்தியாவுக்கு. இந்தியாவை சுற்றி இருக்கும் நாடுகள் எப்படிப்பட்டவை என்று தெரியும். விடாக்கண்டன்களும், கொடாக்கண்டன்களும் இருக்கிறார்கள். எங்கேயோ படித்தது ஞாபகத்துக்கு வருகிறது. "இந்தியாவுக்கு மூணு பக்கம் கடல்" என்றால் "நான்கு பக்கம் எதிரிகள்" என்று. எதிரிகளை பார்ப்போமா? ஒருவன் மதப்பயங்கரவாதத்தை உலகம் முழுக்க பரப்புவதையே முழுநேர தொழிலாக கொண்டு - இந்தியாவின் நிம்மதியை, இறையாண்மையை கெடுத்து கொண்டிருப்பவன்.

மூன்று முறை இந்தியாவிடம் மோதி பாடம் கற்றும் கூட அறிவை பெறாதவன். அவனுக்காக ஆயுதங்களை வாங்கி குவிக்க தான் வேண்டி உள்ளது. இன்னொரு நாடு எவனுடையது என்றால் - இந்தியாவை எத்தனை துண்டு துண்டாக கூறு போடலாம் என்று யோசிக்கும் மாவோயிச சீனா பயங்கரவாதம். தனது "உய்க்குர்" மாநிலத்தையே காப்பாற்ற திராணி இல்லாதவன் - "அருணாசலப்பிரதேசத்தை அடிப்போமா... தமிழ் ஈழத்தில் கால் பதிப்போமா "என்று பார்க்கிறான். அவனிடம் இருந்தும் - தன்னை பாதுகாத்து கொள்ள ஆயுதங்களை வாங்க வேண்டி உள்ளது. "ஏதோ வம்புக்கு வாங்கி ஆயுதங்களை குவிப்பதாய் நினைத்து கொண்டு" விமர்சிக்கிறார்கள்.

அகில உலக போலீஸ், நம்பர் ஒன் வல்லரசு, கொடுங்கோலன் என்று சிலரால் வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் எல்லை நாடுகள் கனடா... மெக்ஸிகோ... உண்மையில் ஆயுதங்களை வாங்கி குவிப்பதாக இருந்தால் - கொடுங்கோலனின் பக்கத்தில் இருக்கும் இந்த இரண்டு நாடுகள் தான் ஆயுதங்களை வாங்கி குவித்திருக்க வேண்டும். நம்பர் ஒன் வல்லரசை பார்த்து அஞ்சி நடுங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆயுதங்கள் வாங்கி குவிக்கவில்லையே. ஏன். நாடுகளின் சர்வதேச எல்லையை மதிக்கின்ற பண்பு அமெரிக்காவுக்கு உள்ளது. அந்த பண்பு சீனனுக்கு இல்லையே. சுற்றி இருக்கிறவர்கள் வம்பு சண்டை பேர் வழிகளாக இருக்கும் போது -ஆயுதங்களை வாங்கி குவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்படுகிறதே.

அப்படி பகுத்தராயும் பண்பும் - இங்கே உள்ளவர் களுக்கு இல்லையே. இருந்து இருந்தால் இப்படி ஒரு விமர்சனம் வந்திருக்காதே.இங்கே உள்ளவர்களே இப்படி இருந்தால் - எதிரிகளை பற்றி சொல்லவா வேண்டும். அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு காரணமான பெண் விஞ்ஞானியை பற்றி தெரிந்து கொள்வோம். பெருமை கொள்வோம்.

அக்னி ,5 ஏவுகணை சோதனை வெற்றியை உலகமே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்டவர்களில் ஒருவர்தான் பெண் விஞ்ஞானி டெஸ்சி தாமஸ். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) அக்னி ஏவுகணை பிரிவில் பணியாற்றுகிறார். கேரள மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்தவர். தும்பா ராக்கெட் மையத்தின் அருகேதான் இவருடைய வீடு. சிறிய வயதில் இந்த தளத்தில் இருந்து ராக்கெட்டை செலுத்தும் போதெல்லாம் பார்ப்பார். அப்போதே அவர் இளம் மனதில் ராக்கெட் பற்றிய எண்ணம் வேரூன்றியது.

திருச்சூரில் பி.டெக் படித்த பிறகு, டிஆர்டிஓ.வில் 1985ல் விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு பணியாற்றி கொண்டே ஏவுகணை தொழில்நுட்பம் பாடத்தில் எம்.டெக் படித்தார். பின்னாளில், அவருடைய வாழ்க்கையில் ராக்கெட் போல் ஏற்றம் ஏற்பட இதுதான் உதவியது. இந்த படிப்புக்கு பிறகு, ஏவுகணை தொழில்நுட்ப பிரிவுக்கு மாறினார். அக்னி,,3 மற்றும் அ க்னி,4 ஏவுகணை திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்த ஏவுகணைகள் வெற்றிகரமாக பாய்ந்து இலக்குகளை தகர்த்தபோது, இவருடைய திறமை வெளி உலகுக்கு தெரிய வ ந்தது. அவருக்கு. ‘நெருப்பு மகள்’ (அக்னி புத்ரி) என்ற பெருமைக்குரிய பட்டப் பெயர் உருவானது. பின்னர், அக்னி,5 ஏவுகணை திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்த ஏவுகணையின் வெற்றிக்காக 2 ஆண்டுகள் பாடுபட்டார்.
தொடர்புடைய பதிவுகள் :


10 comments:

 1. சூப்பர், நன்றாக சொல்லி உள்ளீர்கள், பிழைப்புக்காக தாய்நாட்டையே குறைசொல்லும் கூட்டம் அது

  ReplyDelete
 2. உங்களது வாதத்துடன் நான் ஒத்துப் போகிறேன். கட்டாயம் இந்தியாவை ஆக்கிறமிப்பு வெறி பிடித்த கம்யூனிச சீனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இன்னும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் தேவைதான்.

  மதச்சார்பற்ற உலகின் மிகப்பெரிய மக்களாட்சி முறை நாடான இந்தியாவை பாதுகாக்க இது தேவைதான். ஒருபக்கம் கம்யூனிசம், மறுபக்கம் மதச்சார்புடைய வெறியர்களின் அங்களாய்ப்பு பொறாமை கேடித்தனம் ஆகியவைகளிலிருந்து உன்னத மக்களாட்சி முறையை நம்பி வாழும் இந்திய மக்களை பாதுகாக்க இது தேவைதான்.

  இந்தியாவில் ஏழைகளை சுட்டிக்காட்டி, இதுபோன்ற பாதுகாப்பு முயற்சியின் முன்னேற்றங்களை மட்டந்தட்டுவது சரியாகாது. மாநில அரசுகளின் பொறுப்புகளில் உள்ள இம்மக்களை சரியான முறையில் நிர்வகித்து அவர்களுக்கு தக்க உதவிகளை செய்யாமல் அனைத்திற்கும் மத்திய அரசை குற்றம் சொல்வது சிறு பிள்ளைத் தனமானது.

  கூத்தாடிகளால் ஆட்சி செய்யப்படும் தமிழ்நாட்டில் இதுபோன்ற ஏழை மக்களின் இப்பரிதாப நிலை மாறுவதற்கு இன்னும் சில பத்தாண்டுகள் தேவைப்படுமோ?

  இந்தியாவில்ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்கு இந்து மதத்தின் கேடுகெட்ட (கீழ்)சாதி அமைப்புகளும் ஒரு காரணம்தான் என்பதையும் கோடிட விரும்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை மாசிலா. சாதிய கட்டமைப்பை இறுக்கி பிடித்துள்ள மாநிலங்கள் தமிழகத்தை விட மிக மோசமாக பின் தங்கி உள்ளது என்பது உண்மை தான் சாதி வெறி மீண்டும் தலை தூக்குவதை காணும்போது - வட இந்திய மாநிலங்களின் நிலை தமிழகத்திற்கும் வந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது.

   Delete
 3. இவர்கள் எல்லாம் ஆடுகள் நனைக்கிறதே என்று அழும் ஓநாய்கள். ஆடுகள் எப்போது குகைக்குள் வரும், எப்போது கபளீகரம் செய்யலாம் என்று காத்திருக்கும் எதிரிகளுக்காக, பிறந்த நாட்டையே காட்டிக்கொடுக்கும் கூட்டங்கள்.

  ReplyDelete
 4. வணக்கம். இதைப்பார்த்த பின்பு பின்னூட்டமிடாமல் போக எனக்குத் தோன்றவில்லை. இது வினவு மீதான விமர்சனமென்று நினைக்கிறேன். இதற்கு முன்பு கூடங்குளம் குறித்த பதிவில் பின்னூட்டமிட்டிருந்தேன். அதில் நீங்கள் உதயகுமார் வேண்டாதவர்களை சேர்த்துக் கொண்டதால்தான் மக்கள் அவரை நம்பவில்லை என்று அசட்டுக் காரணம் கூறியிருந்தீர்கள். எழுத்தாளர் ஞாநி உட்பட பல மக்களால் விரும்பப்படுகின்ற பலரும், இயற்கை ஆர்வலர்களும் கூடங்குள உலையை எதிர்க்கிறார்கள். அதற்காகவாவது நீங்கள் அவர்களுடன் உடன்பட்டிருக்கலாம். ஆனால் இக்கும்பலை சேர்த்ததால்தான் உதயகுமாரை மக்கள் நம்பவில்லையென்றீர்கள்.
  //பன்னாட்டு முதலாளிகளில் ரஷ்யா இருக்கிறதா என்ன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தானே இந்த கும்பல் எதிர்க்கும்// கூடங்குளம் அணு உலை எந்நாட்டு முதலாளிகளுடையது ?. அந்த இளம்பெண் கதைக்கு வருகிறேன். அந்த இளம்பெண்ணுக்கு நான்கு தம்பி தங்கைகள் பட்டினியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதை விட்டு இவள் மார்பை பெரிதாக்கும் சிலிக்கான் சிகிச்சை செய்வது சரியாகுமா ? காமுகர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள கராத்தே கற்கிறாள் யாரிடம் கற்பழித்துக் கொலைசெய்யும் கொலைகாரனிடம். எப்படி தன்னை விற்று. இதுதான் இந்தியா நீங்கள் சொல்லும் காமுகர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள இந்திய அமெரிக்க முதலாளிகளிடமிருந்து ஆய்தங்களை வாங்கிக் கொண்டு இந்தியாவின் வளங்களை அவர்களுக்கு தாரை வார்க்கிறார்கள். இதுவரை 2 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரிருவர் என்றால் விவசாயிகள்தான் காரணம் எனலாம். இலட்சம் பேர் தற்கொலை என்றால் அதற்கு அரசின் திட்டங்களைத்தானே குறைசொல்ல முடியும் ? போன வாரம் கூட ஒரே நாளில் 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதற்கெல்லாம் என்ன காரணம். என்றைக்காவது இந்த அரசு விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க முயற்சித்ததுண்டா ? ஆனால் வெளிநாட்டின் பிடி பருத்தியையும், கத்தரிக்காயையும் இந்தியாவில் திணிக்க அரசு பெரும் முயற்சி செய்கிறது. இந்திய விதைகளுக்கு அமெரிக்க முதலாளிகள் காப்புரிமை வாங்கித் தமது சொத்தாக மாற்றிக் கொள்ள நினைக்கிறார்கள். இந்தியாவின் உணவுத்தேவை சுயசார்பினால் தீர்க்கப்படாமல் தன்னைச் சார்ந்திருக்கும்படி செய்துவிட முயற்சிக்கிறது அமெரிக்க. அதற்கு ஆட்சியாளர்கள் தன்னாலியன்றதைச் செய்கிறார்கள். குடியை எதிர்க்கும் நீங்கள் இந்தியாவின் நீராதாரத்தையே அழித்து வரும் கோக் பெப்சியை எதிர்ப்பதில்லையே ஏன் ? அமெரிக்காவின் எல்லையை மதிக்கும் பண்பை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஈராக், ஆப்க்கானிச்தான் எல்லைகளை அமெரிக்கா எந்தளவுக்கு மதிக்கிறது ? பாகிஸ்தான் எல்லைதாண்டி அந்நாட்டின் ராணுவத்தினரையே கொல்லுமளவுக்கு அமெரிக்காவின் பண்பு இருக்கிறது. இந்த அணுவாயுத ஏவுகணைகள் யாரைப் பாதுகாக்கப் போகின்றன ? இவை போரில் ஈடுபடும் இரு நாடுகளின் போரையே விரும்பாத காரணமே இல்லாமல் மக்களை இலட்சக்கணக்கில் கொல்லப்போகின்றன. இல்லையெனில் பெருமைக்காக வைத்துக் கொள்ளப்படப் போகின்றன.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட விமர்சனத்திற்கு நன்றி தமிழ். அக்னி ஏவுகணை தவிர்த்து பிற சில விஷயங்களில் கருத்தொற்றுமை உள்ளது நம்மிடம். நாடு பிடிக்கும் ஆசையில் ஒருவன் ஆயுதங்களை வாங்கி குவித்தால் - அந்த இளம் பெண் சிலிக்கான் சிகிச்சை செய்கிற உதாரணம் பொருந்தும். அமெரிக்க எல்லை நாடுகளாக இருந்தும் -​கனடாவுக்கோ, மெக்ஸிக்கோவுக்கோ ஆயுதங்களை வாங்கி குவிக்கிற அவசியம் இல்லை என்று தான் சொல்ல வந்தேன். சுண்டைக்காய் நாடுகளை எல்லை நாடுகளாக வைத்து கொண்டு நாம் படுகிறபாடுள்ளதே. ஆப்கன், ஈராக் மீதான தாக்குதல் "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பன. ஈராக்கின் குவைத் ஆக்ரமிப்பு மற்றும் செப் 11 தாக்குதலின் தொடர்ச்சிகள்.

   Delete
  2. அய்யா தமிழானவனே, உங்க ஆசைப்படியே ஆயுதமும் வாங்க வேண்டாம். அணுகுண்டும் செய்ய வேண்டாம். நல்லவன்களாகவே இருப்போம். எவனாவது சண்டைக்குன்னு வந்தா என்ன பண்றது. கூண்டோடு கைலாசம் போக சொல்றிங்களா?

   Delete
 5. ஏவுகணையை ஏவியவுடன் சீனாவின் பதிலை பார்த்தால் தெரியும், அக்னி ஏவுகணையின் நோக்கத்தையும் பயனையும். போர் தளஞ் சார்ந்த உத்திகளில் இது முக்கியதுவம் வாய்ந்தது. இந்தியா சீனாவை எந்த மூலையிலும் தாக்க திறன் பெற்றுள்ளது என்பது அந்நாட்டு செயல்படுத்தும் இந்தியாவுக்கு எதிரான இராணுவ கொள்கைகளை பாதிக்கும்.

  முதலாளிதத்துவ ஏகாதிபதிய வல்லரசு நாடு என்பது சீனாவுக்கு பொருந்தும். அதற்கு தக்கவாறு நம்து உத்திகளை வளர்க்க வேண்டும்.

  இந்தியா சீனா போரில் சீனாவை ஆதரித்த, போருக்கு காரணம் இந்தியாவின் ஆதிக்க காரணங்கள் தான், என்று கூறும் இயக்கங்கள் இருக்கின்றவரை இன்னும் முனைப்பாக இருக்க வேண்டும்.
  அக்னி ஏவுகணை உருவாக்காமல் இருந்தால் வறுமை ஒழிந்துவிடாது. வறுமை மற்றும் கொடுமைகள் ஓழிய அதற்கு உண்டான கடைபிடிக்க வேண்டிய வழிவகைகள் வேறு, ஏவுகணை வேறு.

  ReplyDelete
  Replies
  1. எல்லா வியாதிக்கும் ஒரே மருந்தை சாப்பிட சொல்கிறார்கள்.

   Delete
 6. அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் போஸ்ட் Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails