.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

May 9, 2012

ராமதாஸும், நான்காவது தூணும்...ராமதாஸ் - ஜனநாயகத்தின் நான்காவது தூணாம் பத்திரிகைகள் பா.ம.வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார். நிச்சயம் அரசியலில், சினிமாவில் ஒருவர் பிரகாசிக்க ஊடகங்களின் துணை ஒரளவுக்காவது தேவைப்படுகிறது. அரசியல் கட்சிகள் குறித்து -பத்திரிகைகளில் மோசமாகவாவது எழுதப்பட்டால் தான், மக்களுக்கு சில கட்சிகள் இருப்பது மறக்காமலாவது இருக்கும். அந்த வகையில் பத்திரிகைகள் பா.ம.க குறித்து எழுத வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார்.

சித்திரை பௌர்ணமியையொட்டி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க வெள்ளி விழா மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியது, "நாட்டில் நல்லாட்சி அமைந்திட நான்கு தூண்களைக் கூறுவார்கள். அதில் முக்கியமான நான்காவது தூணான செய்திதாள்கள் தான் மாற்றத்தை அளிக்கும். எங்களுக்கு ஒரு வாய்ப்பு பத்திரிககையாளர்கள் மூலமாகத் தான் தர வேண்டும். நீங்கள் எங்களை விமர்சனம் செய்யுங்கள். அது ஆரோக்கியமான விமர்சனமாக இருக்கட்டும். " என்று கேட்டு கொண்டார்.

ஊடகங்களின் தேவையை கால தாமதமாகவாவது உணர்ந்து கொண்டுவிட்டார். ஆனால் பாருங்கள்... பா.ம.க மற்றும் வன்னிய சங்கத்தால் நடத்தப்படும் மாபெரும் கூட்டம் குறித்து - பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவ்வளவு கேட்டு கொண்டும் கூட - நாம் வழக்கமாய் பார்க்கும் முன்னணி நாளேட்டில் மாமல்லபுர சித்திரை பௌர்ணமி விழா பிரசுரிக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் முன்னணி கட்சியாக அறியப்படுகிற ஒரு கட்சியின் கூட்டத்திற்கு - அந்தளவுக்கு தான் மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தினமணி இணையத்தில் இருந்து எடுத்தது. பா.ம.க மீது பத்திரிகைகளுக்கு என்ன கோபம். பத்திரிகைகள் ஏன் நிராகரிக்கிறது. ஒரு அரசியல் கட்சியாக பா.ம.க.,வை பற்றி எழுதலாம். அதன் சில ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து எழுதவும் முடியும். பத்திரிகைகள் மெச்சியும் எழுதி உள்ளதை மறக்க இயலாது. ஆனால், அதுவே சாதி கட்சியாக காட்சியளிக்கும் பட்சத்தில் ஊடகங்கள் எப்படி அந்த கட்சியை ஊக்குவிக்கும். எல்லோருக்கும் ஒரு சாதி இருக்கிற பட்சத்தில் - மற்றொரு சாதியை பற்றி எப்படி எழுதக்கூடும்.

நடுநிலை பத்திரிகைகள் சாதியக்கட்சிகளை தூர வைப்பது தவறில்லையே. ம.தி.மு.க பற்றி எழுத எந்த பத்திரிகையும் தயக்கம் காட்டாதது அதனால் தானோ. வன்னியர் சங்க வெள்ளி விழா கூட்டத்தில் - பத்திரிகைகள் பா.ம.க வுக்கு துணை இருக்க வேண்டும் என்று கேட்டுவிட்டு - அடுத்த நொடியே இப்படி பேசுகிறார்.

"தமிழக மக்களுக்கு பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க எந்த கட்சியினரும் இதுவரை முயற்சி எடுக்கவில்லை. எந்தக் கட்சியிலாவது வன்னியருக்கு முன்னேற்றம் கிடைக்காதா என்ற ஆதங்கத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டோம். அது பொய்த்துப் போன நிலையில், இனி எந்தத் திராவிடக் கட்சிகளுடனும் கூட்டு வைக்கப் போவதில்லை." என்று சாதி கட்சி தலைவராக சட்டென்று மாறுபட்டு பேசும்போது - ஊடகங்களே யோசிக்கவே செய்யும்.

 முன்னதாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், "தமிழகத்தை ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளால் மாநிலத்திற்கு முன்னேற்றம் கிடைக்கவில்லை. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தான் ஆரம்பம் முதல் குரல் கொடுத்து வருவதாகக்" கூறினார். ஆக சாதியத்தை விட தயாராக இல்லை எனும்போது - பா.ம.க.,வை பற்றி பத்திரிகை எழுத ஊடகங்களும் தயாராக இருக்காது.

"சாதி வேண்டும்" என்று சொல்ல நியாயமான காரணங்கள் இருக்கும்போது - "சாதி வேண்டாம்" என்று சொல்லவும் நியாயமான காரணங்கள் இருக்குமே. ஒவ்வொரு தேர்தல் முடிவும் - சாதி கட்சிகளுக்கு எதிராக தான் உள்ளன என்பதை உணர வேண்டும். புதிதாய் தோன்றிய சாதிகட்சிகளுக்கெல்லாம் தொகுதிகளை வாரி வழங்கி கலைஞர் - சென்ற தேர்தலில் ஏமாந்து தானே போனார்.

முன்பு போல பா.ம.க., பத்திரிகைகளுடன் மோதல் போக்கை கொண்டிருக்கவில்லை. பா.ம.க குறித்த செய்திகள் இடம் பெறாமை ஒரு காரணமாக இருக்கலாம். "செய்தி போடுவானேன். வாங்கி கட்டி கொள்வானேன்" என்று நினைத்திருக்கலாம். மக்கள் விரும்புவதாக சொல்வதை தான் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. இதில் அரசியல் ஆளுமைகளும் விதிவிலக்கல்ல. மக்கள் விரும்பக்கூடிய அரசியல் ஆளுமையை ஊடகங்கள் தங்கள் சுய வெறுப்பு காரணமாக நிர்முலமாக்கிவிட முடியாது.

அதே போல மக்கள் விரும்பாத ஒன்றை - ஊடகங்கள் உயர்த்தி பிடிப்பதால் மட்டும் செல்லும்படியாக ஆக்கிவிட முடியாது. ஆக மக்கள் ஆதரவு, நான்காவது தூண் ஆதரவு எல்லாம் ஒரு சேர அமைய வேண்டும். அதற்கு அடிப்படையிலேயே நிறைய மாற்றங்கள், அதீதமான உழைப்புகள் வேண்டும். வெறுமனே திராவிட கட்சிகளை கூறுவது மட்டும் நிவாரணம் ஆகாது. மக்களுக்கு தெரியும். "யார் யாரை எங்கே வைப்பது" என்று.

நோயாளிகளின் நாடிப்பிடித்தவர் மக்களின் நாடியை பிடித்து, மக்களுக்கு என்ன தேவையோ - அதற்கேற்ப சரியாக திட்டம் வகித்தால் வெல்வதற்கான வாய்ப்பில்லாமலில்லை.
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

 1. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 2. ////மக்களுக்கு தெரியும். "யார் யாரை எங்கே வைப்பது" என்று.////. சரிதான். சாதி கட்சிகளை எங்கு வைப்பது அவர்களுக்கு தெரியும். பா.ம.க. வளர்ச்சியடையாதற்கு காரணம் சாதி அடையாளம்தான். ஒழுக்கம், சுயநலம், நம்பிக்கை ஆகியவற்றை பா.ம.க தலைமை இழுந்துவிட்டது.

  ரஜினி படப்பெட்டியை தூக்கி ஓடியது, விஜயகாந்த அரசியலுக்கு வருவதற்குமுன் அவரின் ரசிகர்களை அடித்தது, குஷ்பூவை ஊர் ஊராக் துரத்தியது, வட தமிழகத்தின் சாதி சூழ்நிலையை ஆகியவற்றால் பா.ம.க.வின பெயர் கெட்டுப்போய் முன்னேறாமல் உள்ளது. அப்போது செய்ததை போல் இப்போது விஜயகாந்தை பற்றி பேசத்தான் முடியும் கை வைக்க முடியுமா?

  ReplyDelete
 3. அன்புமணியும் ,மருத்துவர் அய்யாவும் ஜாதியம் பேசுகிறார் என்றால் வன்னியர் தங்களை வன்னிய குல சத்திரியர் என சொல்லவேண்டும் என ஐயா சொன்ன பின் அனைதத் சமூகத்தினரும் தாங்கள் இன்ன பிரிவு என தங்கள் மக்களை சொல்லவேண்டும் என கூறுக்கிறது .வளரும் ஒரு சமுகத்தை ஆண்ட சமுகத்தை ஆதிக்க சமூகம் கையில் உள்ள ஊடகம் சரியான முறையில் காட்ட வில்லை என்பதே உண்மை , சூரியனை எல்லா நேரங்களிலும் கையால் மறைக்க முடியாது .

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails