.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

May 12, 2012

லெனினை விஷம் வைத்து கொன்றார் ஸ்டாலின்?

:ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் விளாடிமிர் லெனினை, அவரின் தோழர் ஜோசப் ஸ்டாலின் விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என, சரித்திர வல்லுனர் தெரிவித்துள்ளார்.பத்திரிகை செய்தி இப்படி தெரிவிக்கிறது.

ரஷ்ய புரட்சியாளர் லெனின், அதிபரான பின் தனக்கு பின் நாட்டையும், கட்சியையும் வழி நடத்தி செல்ல தகுதியானவர் ஸ்டாலின் என, முதலில் கருதினார். ஆனால், ஸ்டாலினின் சர்வாதிகார போக்கால், அதிருப்தியடைந்த லெனின், லியோன் ட்ராட்ஸ்கியை கட்சியின் பொது செயலராக அறிவிக்க நினைத்தார். "இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின், லெனினை விஷம் வைத்து கொன்றுள்ளதாக, நான் கருதுகிறேன்' என, ரஷ்ய வரலாற்று வல்லுனர் லெவ் லூரி என்பவர், தனது ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

வரலாற்று வல்லுனர் லூரி, தனது ஆய்வு கட்டுரையில் கூறியிருப்பதாவது:ஸ்டாலின், தன் எதிரிகளை விஷம் வைத்து கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதே பாணியை தான், அவர் லெனின் விஷயத்திலும் கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால், லெனின் 53 வயதில் இறந்த பிறகு, அவரது மூளை இறுகி விட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லெனின், தனது இறுதி காலத்தில் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற கருத்தும் உண்டு. அதன் பிறகு, அவருக்கு இரண்டு முறை பக்கவாதம் ஏற்பட்டது. முதல் பக்கவாதத்தால், அவர் எழுதும் திறனை இழந்தார். இரண்டாவது பக்கவாதத்தால், அவர் பேசும் திறனை இழந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன் வரை, நன்றாக பேசிக்கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது. நன்றாக பேசிக்கொண்டிருந்த நபர், மறுநாளே இறந்து போனதற்கு, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன்.

அவரது உடல் இன்னும் செஞ்சதுக்கத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இருந்தால், இப்போது கூட அவரது மூளையை பரிசோதிக்க முடியும்.இவ்வாறு லூரி, தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.இதெல்லாம் உண்மையாக இருக்குமா என்று ஒரு மூத்த தோழரிடம் (முன்னாள் கம்யூனிஸ்ட்) கேட்டேன். சிரித்தார். "உங்களுக்கு கம்யூனிஸ்ட்களையும் தெரியல. கம்யூனிஸத்தையும்  தெரியல" என்றார். அடக்கத்துடன் "ஆமாங்க" என்றேன். தொடர்ந்தார். "ஆட்சியை கைப்பற்றியதும் லெனின் என்ன செய்தாரோ - அதையே ஸ்டாலின் செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். லெனின் என்ன செய்தார்.

"லெனின் செய்த முதல் காரியம். ரஷ்ய ஜார் நிக்கலசின் மனைவியை குழந்தை குட்டிகளை ஒட்டு மொத்தமாக கொன்று குவித்தது தான்" ஆட்சி, பதவி ருசியை சுவைக்க ஆசை வந்து விட்டால் - ஜார் நிக்கலசாக இருந்தால் என்ன, லெனினாக இருந்தால் என்ன? கொல்ல வேண்டும் என்பதே சர்வாதிகாரிகளின் முடிவாக இருக்கும். உலக சர்வாதிகாரிகளின் வரலாறு அதை தானே காட்டுகிறது. "


"இத்தோடு ஸ்டாலின் படுகொலை வெறி முடிந்ததா? "லட்சக்கணக்கான உக்ரேனிய மக்களை பட்டினி போட்டு கொன்றார். ஒட்டு மொத்த செசென்ய் மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினார்" தானே.

"ஜார் மன்னரும் அடக்குமுறை ஆட்சி புரிந்தவர் தானே"

"இருக்கலாம். மக்களை கொன்று குவித்ததில் ஸ்டாலினுக்கு, ஜார் நிக்கோலஸிற்கும் வித்தியாசம் இல்லாம போச்சே"  "மார்க்சியம் லெனின்,ஸ்டாலின்,மாவோ.போல்பாட் ஆகியோரால் ஆட்சியை பிடிக்கவும் சர்வாதிகாரம் நடத்தவும் ஒரு கருவியாகத்தான் பயன்பட்டது. கொடுங்கோல் செயல்களை தொடர்ந்து செய்யவும், கூட்டம் கூட்டமாக மனிதர்களை சுட்டு கொல்லவும், சித்திரவதைகளை மனசாட்சி இன்றி செய்யவும் ஒவ்வொரு சர்வாதிகாரிக்கும் ஒரு சித்தாந்தத்தின் பெயர் தேவைப்படுகிறது.

ஹிட்லருக்கு அது இனப்பற்றாக இருந்தது. இடிஅமீனுக்கு அது யுகாண்டாவாக இருந்தது. ஸ்டாலின், மாவோ, போல்பாட்டுக்கு அது கம்யூனிசமாக இருந்தது." என்றார். பிறகு கடைசியாக சொன்னார். "கம்யூனிச சர்வாதிகாரத்துல இதெல்லாம் சகஜம் தானப்பா . இன்னும் இந்தியா அந்த விஷயத்தில் கத்துக்குட்டி   " என்றார்.

அதனால் தானே நாம் இந்தியாவை நேசிக்கிறோம்.தொடர்புடைய பதிவுகள் :


8 comments:

 1. நீங்க என்ன்ன சொல்ல வரீங்க? லெனின ஸ்டாலின் விஷம் வச்சு கொன்னார். அத பத்தி சொல்ல வேண்டியது தான. ஒரு முன்னால் கம்யூனிஸ்ட் எல்லாம் எதுக்கு. ஒரு வேலை நீங்க தான் அந்த முன்னாலோ ??

  ReplyDelete
  Replies
  1. கேரளாவில் கம்முனிஸ்ட்கள் செய்த கொலைகள் குறித்த சமீபத்து செய்திகளை பார்க்கும்போது - ஸ்டாலின், லெனினை போட்டு தள்ளி இருந்தால் ஆச்சர்யமில்லை.

   Delete
 2. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

  ReplyDelete
 3. பெரிய அக்கபோராக அல்லவா இருக்கிறது! வரலாற்று ஆதாரம் உண்டா? தோழர்கள் கருத்து என்ன?

  ReplyDelete
  Replies
  1. பல தமிழ் இணையதளங்களில் வந்துள்ளதே. தினமலரிலும் வந்ததே. மேலதிக தகவலை கூகுளில் பெறலாம்.

   Delete
 4. மன்னராட்சி, ராணுவ ஆட்சி, கம்யூனிச ஆட்சி போன்றவைகளுக்கு படுகொலைகள் புதிதில்லையே.

  ReplyDelete
 5. பற்றி தனியாக ஒரு பதிவிடும் எண்ணம்.

  நூற்றுக்கு நூறு இந்தியா நேசிக்க தகுந்த நாடுதான்
  ////
  "லெனின் செய்த முதல் காரியம். ரஷ்ய ஜார் நிக்கலசின் மனைவியை குழந்தை குட்டிகளை ஒட்டு மொத்தமாக கொன்று குவித்தது தான்"
  /////
  இது லெனின் ஆட்சி அதிகாரத்திற்காக செய்தார் என்பதை விட, அந்த காலகட்டத்தில் அந்த நாட்டில் இருந்த சூழ்நிலையில் மக்களும் விரும்பியிருக்கிறார்கள்.

  இது நம்மூர் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம், நான், எனது, குடும்பம், வாருசு, பணம், பல தலைமுறைக்கு சொத்து, மக்கள் பற்றி அக்கரையின்மை எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு அரசியல்வாதியை ஜார் மன்னர் நிலையை ஆக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது அவர்கள் கையில்தான்.

  ReplyDelete
  Replies
  1. இது லெனின் ஆட்சி அதிகாரத்திற்காக செய்தார் என்பதை விட, அந்த காலகட்டத்தில் அந்த நாட்டில் இருந்த சூழ்நிலையில் மக்களும் விரும்பியிருக்கிறார்கள்./////


   இருந்தாலும் குழந்தைகளை கொல்வது எந்த விதத்தில் நியாயம்.

   Delete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails