.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

June 2, 2012

சீமான் பெண்மையை இழிவுபடுத்தினாரா?

சீமான் பேசிய ஒரு பேச்சுக்காக பகுத்தறிவு சிகாமணிகள் "சீமான் பெண்ணுரிமையை இழிவு படுத்துகிறார்" என்று விமர்சித்திருந்தார்கள். அப்படி சீமான் என்ன பேசினார், அதையும் ஏன் பேசினார் என்று பார்ப்போம். "இந்த இனத்தில் இந்த மொழிக்கு பிறந்தவனின் பேச்சு எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என்று.. ஏனென்றால் பல நாட்டை சேர்ந்தவனும் இங்கு வந்து போய் இருக்கிறான்.. அதில் பல பேரு தனியா வந்து போய் இருக்கிறான்.. யாராவது உங்க வீட்டு பக்கம் வந்து இருக்க போகிறான்.. கொஞ்சம் கேட்ட தெளிவாய்க்கங்க செல்லையா.."

தமிழர்களுக்கு மொழி உணர்வும், இன உணர்வும் செத்து போய் கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கத்தில் - வரம்பு மீறி பேசி இருக்கிறார். தவறு தான் அத்தகைய பேச்சு. ஆனால் திராவிடம் பேசி, திராவிடம் பேசி - தமிழுணர்வை மழுங்கடித்து, மொழி உணர்வு அற்றவர்களாக ஆக்கிவிட்டார்களே எம்மக்களை என்கிற வேதனையில் சற்றே அநாகரீகமாய் பேசிவிட்டார் சீமான் என்று தான் சொல்ல வேண்டும். இனி இத்தகைய பேச்சுக்களை சீமான் தவிர்த்தல் நல்லது.

இந்தியாவில் ஏனைய மாநில மக்களோடு ஒப்பிடும்போது - தமிழர்கள் நிறைய தான் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள்... உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் என்று... அதையும் பார்த்து மக்கள் சொரணை அற்று இருக்கிறார்கள் என்றால், எம் தலைவர்களும் அப்படி தான் இருக்கிறார்களே என்கிற எரிச்சலில் - பேச கூடாத வார்த்தைகளை பேசி விட்டார் சீமான். தமிழர் நலனுக்காக ஒருவன் பாடுப்பட வேண்டும் என்றால் - அவன் திராவிட முகமூடி அணிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதோ நம்மால் பேச முடியாததை, செய்ய முடியாததை அவனாவது செய்கிறானே என்று திருப்தி அடையாமல் அதிலும் குற்றங்கண்டு பிடித்தால் எப்படி.

சீமான், மணியரசன், பழ.நெடுமாறன் போன்ற தமிழுணர்வாளர்களுக்கும், திராவிட போராளிகளுக்கும்(?) என்ன வித்தியாசம் என்றால் - தமிழர்களுக்காக அவர்கள் சிறை செல்வார்கள். இவர்கள் பெரியார் சிறை சென்ற கட்டுரையை வாசிப்பார்கள். ராமதாஸ் சாராயக்கடைக்கு பூட்டு போட முனைந்தால் - இவர்கள் பெரியார் இருநூறு தென்னை மரத்தை வெட்டினார்என்று கதை படிப்பார்கள். பார்ப்பனியா, பனியா கும்பலை விரட்ட வேண்டும் என்று இவர்கள் போராட்டம் செய்தால் "ஏற்கனவே 1952லேயே பெரியார் போராடி விட்டாரே. இனி வேறயா" என்று கேட்பார்கள். மொழி உணர்வை ஊட்ட வேண்டியது தலையாய வேலையாக உள்ளது இன்று. ​

சில தினங்களுக்கு முன் தனியா பாலகிருஷ்ணன் என்கிற கன்னட நடிகை "தமிழர்கள் தண்ணீருக்காக கன்னடர்களிடம் பிச்சை எடுக்கிறார்கள்" என்கிற ரீதியில் கன்னட வெறியுடன் முகப்புத்தகத்தில் எழுதி இருந்தார். இந்த தலைமுறையை சேர்ந்த ஒரு நடிகைக்கு, அதுவும் தமிழ் படங்களில் நடித்து பணம் பார்த்த ஒரு பெண்ணுக்கு இருக்கிற மொழி வெறி, உணர்வு - எதுவும் தமிழர்களுக்கு இல்லையே என்கிற வேகத்தில் கண்டிக்கத்தக்க சில வார்த்தைகளை பேசிவிட்டார் சீமான். சீமானின் அத்தகைய கருத்துகளை விமர்சிக்கும் பகுத்தறிவு சிகாமணிகள் - விமர்சிக்கக்கூடிய தகுதியை பெற்றவர்கள் தானா? நிச்சயம் யோசிக்க வேண்டும்.இன்று சீமானை கேள்வி கேட்பவர்கள் - சீமானை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளிய போது - கள்ள மௌனம் சாதித்தவர்கள் தானே.

எதையும் அநாகரீகமாய், எவரையும் தரக்குறைவாய் பேசுபவர்களுடன் கொஞ்ச நாள் சீமானும் மேடையேறியதால் - அவருக்கும் அத்தகைய பேச்சு கைவந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சீமான் பேசிய பேச்சுக்கே இந்த பொங்கு பொங்கியவர்கள் - கீழ்க்கண்ட எழுத்துக்களை வாசித்து விட்டு பொங்குவார்களா? சீமான் அம்மாக்களையும், பிள்ளைகளின் பிறப்பையும் சந்தேகிக்கிறார் என்றால் - இந்த சுயமரியாதைக்காரரோ, ஒவ்வொருவரின் மனைவிமார்களின் கற்பையும் இவ்விதம் பரிகாசம் செய்கிறார்.

 1. சீதா, புருஷன் பந்தோபஸ்தினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை.
2. மீனாக்ஷி புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்யவில்லை.
3. நாமகிரி ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற்குப் பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை.
4. இரஞ்சிதம் தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை.
5. சரஸ்வதி மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவாரென்ற கஷ்டத்திற்குப் பயந்து யாருக்கும் இணங்கவில்லை.. வாசித்தீர்களா?

இப்படி பெண்கள் ஒழுக்கமாக இருப்பதை அநாகரீகமாக சொன்னவர் யார்? பகுத்தறிவு போராளி. சுயமரியாதைக்காரர் தான். நீங்களே யூகித்து கொள்ளுங்கள். இதை விட கேவலமாகவா பேசி விட்டார் சீமான். கருஞ்சட்டையாளர்கள் சிலிர்த்து கொண்டு வந்து விட்டார்கள். நான் திருடாமல் இருக்கிறேன். பொய் சொல்லாமல் இருக்கிறேன். எந்த முறைக்கேட்டையும் செய்யாமல் இருக்கிறேன். ஏன்? மனிதனாக பிறந்தவன் ஒழுக்கம் நிரம்பியவனாக இருக்க வேண்டும் என்கிற பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படையில் அங்ஙனம் இருக்கிறேன். ஆனால் அவர்கள் பகுத்தறிந்து சொல்கிறார்கள்,

"போலீஸ்க்கு பயந்து திருடாமல் இருக்கறேனாம். கசையடிக்கு பயந்து லஞ்சம் வாங்காமல் இருக்கிறேனாம். சிறைச்சாலைக்கு பயந்து எந்த அசிங்கமும் செய்யாமல் இருக்கிறேனாம்" என்று சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமோ - அவ்வளவு அசிங்கம் மேலே பெண்கள் குறித்து பகுத்தறிவு வைத்த வியாக்யானம். அதை விடவா சீமான் பெண்மையை கொச்சைப்படுத்தி விட்டார். அதற்காக சீமான் சொன்னதை எம்மால் நியாயப்படுத்த முடியாது.

சேலம் ரயில்வே கோட்டம் உதயமான போது - இந்த மலையாளிகள் செய்த போராட்டம் உள்ளதே... எந்த திராவிட தலைகளும் - மலையாளிகளை போல மூர்க்கத்தனமாக போராடி மாநில உரிமைகளை பெற்று தரவில்லை. சும்மா வேடிக்கை பார்த்து தீர்மானம் மட்டும் போட்டார்கள். அந்த கோபத்தில் சீமான் சீறிவிட்டார் எல்லை மீறி. ஆனால் சீமானை விமர்சிக்க மேற்குறிப்பிட்டவர்களுக்கு எந்த தகுதியுமில்லை.

ஒரு முறை - சங்கர்ராமன் படுகொலை வழக்கு புகழ் காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரி - "வேலைக்கு போகும் பெண்கள் ஒழுக்கம் குறித்து அநாகரீகமாக பேசி" வாங்கி கட்டிக் கொண்டார். அதை விட மோசமான கருத்து - புருஷனுக்கு பயந்து, கடவுளுக்கு பயந்து, அடி உதைக்கு பயந்து கெட்டு போகாமல் ஒழுக்கமாய் இருக்கிறார்கள் என்று பகுத்தறிவு சொன்னது. சீமான் போன்ற போராளிகளுக்கு தெரியும் - பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று. யாரும் சொல்லி தர தேவையுமில்லை. அவசியமுமில்லை.
தொடர்புடைய பதிவுகள் :


0 comments:

Post a Comment

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails