ரஜினிக்கு பணமும், புகழும் - அவரது திறமைக்கு அதிகமாகவும் கிடைத்தது, தேவைக்கு அதிகமாகவும் கிடைத்தது, முயற்சிக்கு அதிகமாகவும் கிடைத்தது. ஆனால் அமைதி? "எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி... அங்கே எனக்கொரு இடம் வேண்டும்" என்று தேடிய கவியரசரை போல தேடுகிறார் அமைதியை. சராசரியாய் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அளவு கூட கிடைக்கவில்லையா? அல்லது கிடைக்காததாய் கற்பனை செய்கிறாரோ."கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன். தூக்கம் கண்ணை சுற்றுமே, அது அந்த காலமே... மெத்தை விரித்தும், பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கமில்லையே... அது இந்த காலமே." படத்துக்காக ரஜினி வாயசைத்த பாடல் - நிஜ வாழ்க்கையில் ரஜினி சொந்தமாகவே பாட வேண்டியதாய் போயிற்றோ. சரி. ரஜினிக்கு என்ன நேர்ந்தது. என்ன குறை. ரஜினி அமைதி தேடி சென்னையிலிருந்து கோவைக்கு குடிபெயர போவதாக வந்த செய்தியை முதலில் பார்ப்போம்.
"சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் அவரது குடும்ப நிகழ்வுகள் காரணமாக அமைதியின்றி தவிப்பதாகவும், இமய மலைக்கு ஓய்வெடுக்கச் செல்வதாகவும் பல்வேறு செய்திகள் வந்த வண்ணமிருந்தன. இதற்கிடையே, அவர் கோவையில் குடியேறப் போவதாக குமுதம் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மகள்கள் பிரச்சினையால் மன நிம்மதி இழந்த ரஜினி, கோவை ஆனைகட்டியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அருகே, அமைதியான சூழலில் ஒரு இடம் பார்த்து தேர்வு செய்த ரஜினி, அங்கே ஒரு சிறிய அழகான பங்களாவை உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் கடந்த ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த பங்களா, கிடுகிடுவென கட்டி முடிக்கப்பட்டு, இப்போது முடியும் தறுவாயில் உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினி சில காலம் அமைதியாக இங்கே தங்கியிருக்க விரும்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வீடு குறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தாவிட்டாலும், அந்தப் பகுதி மக்கள் இதை ரஜினி வீடு என்றே அழைக்க ஆரம்பித்துள்ளனர்."இடம் மாறுவதால் மட்டும் அமைதி சாத்தியப்படுமா? துயரம் நிரம்பிய இதயத்தை எங்கு எடுத்து சென்றாலும் - அது அழுதவாறு தானே இருக்கும். மனம் என்பது ஒரு அறை. அதை நூலக அறையாக பயன்படுத்துகிறீர்களா அல்லது பழைய பொருட்களை போட்டு துர்நாற்றம் அடிக்க விடுகிறீர்களா? நூலக அறையாக பயன்படுத்தினால் அமைதி உங்களுக்குள் இருப்பதை உணருவீர்கள். எத்தனை எத்தனை கதைகள் சொல்வார் ரஜினி. சொல்வதற்கு மட்டுமல்ல - வாழ்வதற்கும் உபயோகப்பட வேண்டும் கதைகள். புரிந்து கொண்டிருக்க வேண்டும் ரஜினி.
எனது குழந்தை பருவத்தில் - நான் சிகப்பு மனிதன் வந்த காலக்கட்டத்தில் - மனைவி பிள்ளைகளை விட்டு சாமியாராக போக போகிறேன் என்று அறிவிக்கை விடுத்தார். அப்போதும் இதே அமைதி, நிம்மதியின்மை தான் காரணம் சொல்லப்பட்டது. ஆக, ரஜினியிடம் இது ஒரு மனநோயாக உள்ளது. எதையும் விட்டு விடுதல் சுலபமா? எதையும் கஷ்டப்பட்டு பெறும்போது - அதன் அருமை தெரியும். விட்டு விட்டு ஓடி விட மனம் வராது. ரஜினிக்கு எல்லாமே சுலபமாக கிடைத்தது. அதனால் எழில் நிரம்பிய வாழ்க்கையின் உன்னதம் விளங்கவில்லை.ரஜினியை போல கடவுளை வணங்கிய சினிமா நடிகர் எவருமில்லை. அப்படி இருந்தும் நிம்மதி இல்லை. கடவுள்களால் நிம்மதி வராது எனும்போது என்ன செய்வது. "சவால் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்வதன் மூலமே வெல்ல முடியும்" நிம்மதி இல்லை என்று ஒதுங்க கூடாது. "பெரும்பாலான வீடுகளில் வயது வந்த பிள்ளைகளால் என்ன மாதிரியான குழப்பங்களும், சிக்கல்களும் ஏற்படுமோ அதுவே ரஜினி வீட்டிலும் நிகழ்ந்துள்ளது". அந்த உண்மையை உணர்ந்தால் குழப்பங்களின் வீரியம் குறையவாவது செய்யும். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது எத்தனை நிச்சயமோ - அத்தனை நிச்சயம் வீட்டுக்கு வீடு பிள்ளைகளால் பிரச்சனைகளும். நிச்சயம்
தேவைக்கதிகமான பணம் எல்லோருக்கும் சந்தோஷத்தை தருவதில்லை. ரஜினி சொன்ன மாதிரி, "குறைவான பணத்திற்கு தான் நாம் எஜமான். நிறைய பணம் நமக்கு எஜமானனாகி - நம்மை அடிமையாக்கிவிடும்" பணத்தின் அருமை, உழைப்பின் பெருமை - இந்த இரண்டையும் உணர்த்தி வளர்க்கப்படாத பணக்கார வீட்டு பிள்ளைகளால் எவ்விதமான மன உளைச்சல்களும், நிம்மதியின்மையும் வருமோ - அதுவே ரஜினிக்கும் வந்துள்ளது. அதை உணர்ந்தால் - ரஜினிக்கு எந்த பிரச்சனையும் பிரச்சனையாக தெரியாது. இதைவிட பிள்ளைகளால் பிரச்சனைகள் அதிகம் சந்தித்தவர்களும் இருக்கிறார்கள்.அந்த உன்னத அரசியல்வாதியின் ஆசை ஆசையாய் வளர்க்கப்பட்ட மகள், முறைகேடு செய்ததாக சொல்லப்பட்டு அதனால் பலகேடு விளைந்து சிறை சென்று - அத்தகைய சூழலில் சிக்கியவர்களே - வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு - எதுவுமே நடக்காதவாறு "இதுவும் கடந்து போகும்" என்று வாழ்க்கையை அதன் போக்கில் போக எடுத்து கொண்டு புன்சிரிப்போடு இருக்கும் போது, உழைத்து ஓடாய் போயும் உழைத்த உழைப்புக்கும், வாழ்ந்த வாழ்க்கைக்கும் புரியோஜனம் பிடிபடாது இருந்தாலும் - அதை பெரிது படுத்தாமல் அமைதியாக, நிம்மதியாக திருப்தியுடன் வாழும் ஏழை.
"எல்லாமே கிடைத்தும், எதுவுமே கிடைக்காத மாதிரி" நினைத்து கொண்டு, அதிருப்தியுடன் - முக்கியமாய் நிம்மதி, அமைதி போன்றவைகளை மலை மலையாக தேடி அலைவதால் கிடைத்துவிடுமா? பணம் இருக்கிறது. அதனால் நினைத்த இடத்தில் மாளிகை கட்டி குடி போய்விட முடியும். அங்கேயாவது நிம்மதி கிடைக்குமா? துயரம் நிரம்பிய இதயத்தை எங்கு கொண்டு சென்றாலும் அழுது கொண்டு தான் இருக்கும். எதிலும் திருப்திபடுங்கள். எது கிடைத்தாலும் அதை உயர்வாக கருதுங்கள். குறை கண்டு பிடிப்பதை விடுங்கள். அமைதி, நிம்மதி தானாக மனதில் உடம்பில் பரவும்.
வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
/// ரஜினிக்கு எல்லாமே சுலபமாக கிடைத்தது. அதனால் எழில் நிரம்பிய வாழ்க்கையின் உன்னதம் விளங்கவில்லை.
ReplyDeleteஎதிலும் திருப்திபடுங்கள். எது கிடைத்தாலும் அதை உயர்வாக கருதுங்கள். குறை கண்டு பிடிப்பதை விடுங்கள். அமைதி, நிம்மதி தானாக மனதில் உடம்பில் பரவும். ///
அருமையாச் சொல்லி உள்ளீர்கள் ! இவை ரஜனிக்கு மட்டுமல்ல... எல்லா மனிதருக்கும் ! பகிர்வுக்கு நன்றி !
சுவாமி தயானந்த சரஸ்வதியின் உபதேசம் போல இருந்தது பதிவு. அவரின் ஆசிரமத்திற்கு பக்கத்தில் தான் நிம்மதியை தேடி போகப் போகிறார். அதனால் பதிவின் அறிவுரையை அங்கேயும் கேட்பார் என நம்புவோம்.
ReplyDelete////ரஜினிக்கு பணமும், புகழும் - அவரது திறமைக்கு அதிகமாகவும் கிடைத்தது, தேவைக்கு அதிகமாகவும் கிடைத்தது, முயற்சிக்கு அதிகமாகவும் கிடைத்தது.///
அதனால் ஒரு வித பயத்துடன் ரஜினி தனது வாழ்க்கையை அமைத்து கொண்டாரோ என தோன்றுகிறது.