.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

October 30, 2012

ஆண்களே "சூதானம்மா இருந்துகங்க"

முதல் முறையாக கல்லூரிக்கு பெண்கள் செல்ல துவங்கிய காலத்தில், "பார்த்து சூதானம்மா (கவனம்மா) போயிட்டு வாம்மா" என்று ஆண்கள் குறித்த அச்சத்தில் பெற்றோர்கள் சொல்வார்கள். இன்று நிலைமை மாறி சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்து எழுதும் போது, "பார்த்து சூதானம்மா (கவனம்மா) எழுது. எதையாவது எழுதி எங்கேயும் மாட்டிக்காதே" என்று ஆண்களுக்கு அறிவுறுத்த வேண்டிய நிலை வந்துள்ளது.

சாதாரணமாக தெரிகிற சில வார்த்தைகள் - வேறு சிலருக்கு கெட்ட வார்த்தையாக தெரிகிறது. ஒரு உண்மை சம்பவம் இங்கே. அந்த பெண்ணுக்கு திருமணமாகிறது. கணவன் வீட்டிற்கு செல்கிறாள். அங்கே கணவர் வீட்டார் பேசி கொள்வது அவளுக்கு அதிர்ச்சியாக உள்ளது. "மயிரு, புடுங்கிறது" போன்ற வார்த்தைகள் அங்கே சர்வ சாதாரணமாய் பயன் படுத்தப் படுகிறது. அவளுக்கு இதெல்லாம் கெட்ட வார்த்தைகள்.

"என்ன குழம்பு வைச்சிருக்கே. மயிரு மாதிரி இருக்கு. காபி போடச் சொல்லி எவ்வளவு நேரமாச்சு. இவ்வளவு நேரம் புடுங்கிட்டா இருந்தே" என்று பேச்சோடு பேச்சாக வரும் இத்தகைய வார்த்தைகள் அவளை எரிச்சலுட்டுகின்றன. இங்கே கூட குறைந்த பட்ச வார்த்தைகளை தான் சொல்லி இருக்கிறேன். அவள் வீட்டில் யாரும் அப்படி பேசியதில்லை. கோபத்தில் திட்டும்போது கூட - வார்த்தைகள் தடிக்காது.

ஆனால் இங்கே அவளுக்கு எல்லாம் புதுசு. அத்தோடு "டி" போட்டு பேசவும் செய்வான் கணவன். அவளை யாரும் "டி" போட்டு பேசினாலும் அவளுக்கு பிடிக்காது. எப்போதோ பக்கத்து வீட்டு பெண் "டி" போட்டு பேசினாள் என்று மாதக்கணக்காய் பேசாமல் இருந்து இருக்கிறாள் - அவளோடு. "என்னை 'டி' போட்டு பேசாதீங்க. எனக்கு பிடிக்காது" என்றாள் கணவனிடம். அதற்கு கணவன், "அப்படி தான் டி பேசுவேன். என்னடி பண்ணுவே" என்று மேலும் பல "டி"க்கள் போட்டு வெறுப்பேற்றினான்.

ஆமாம். "டி" என்பது கெட்ட வார்த்தையா? கெட்ட வார்த்தை என்பதை விட கண்ணியக்குறைவான வார்த்தை. சில தினங்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தேன். அங்கே மினி பஸ்ஸில் ஒலித்து கொண்டிருந்த பண்பலை வானொலியில் அறிவிப்பாளர் சொல்லி கொண்டிருந்தார்.

 "எங்கள் சிறுவயதில் எங்கள் சகோதரிகளை மட்டுமல்ல - வேறு எந்த பெண்களையும் வாடி போடி என்று சொன்னால் அப்பா திட்டுவார். 'அப்படி சொல்லக்கூடாதென்று' அவை கண்ணியக்குறைவான வார்த்தை என்பார். ஆனால் பாருங்கள். இப்போது போடா... போடி... என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும் அதே போல "ங்கொப்ப மவனே "என்பதெல்லாம் பேசக்கூடாத வார்த்தைகள். ஆனால் இப்போது "உங்கொப்ப மவனே" என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்" என்றார்.

ஆமாம். சிலருக்கு தரக் குறைவாக தெரியாத வார்த்தைகள் வேறு சிலருக்கு தர குறைவாக தெரிகிறது. "நல்ல வார்த்தை... கெட்ட வார்த்தை... " என்று சொல்வதை விட - அடுத்தவரை புண்படுத்துகிற, புண்படுத்தாத வார்த்தைகள் என்று அளவிடலாம். ஒருவரை எரிச்சல் அடைய வைக்க எம்மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்போம். கண்ணியக்குறைவான வார்த்தைகளை தானே.

பெண்கள் பேசுகிற கெட்ட வார்த்தைகளை விட ஆண்கள் பேசுகிற கெட்ட வார்த்தைகள் தான் அவனை குற்றவாளியாக்கும். பெண்கள் பேசுகிற கெட்ட வார்த்தைகளை  மறந்து விடுவார்கள். "ஏதோ கோபத்துல பேசிட்டா. விட்டு தள்ளுங்கய்யா" என்பார்கள். ஆனால் ஆண் பேசினால் விவகாரம் தான். பெண் பேசினால் சாதாரணம். ஆண் பேசினாலோ அது - சதா "ரணம்" தான். வீட்டிலும் அது தான் நடக்கிறது. பொது வெளியிலும் அது தானே நடக்கும்.
"பேசுவதற்கு முன், எழுதுவதற்கு முன் யோசியுங்கள். பேசியதற்கு பின், எழுதியதற்கு பின் - அது குறித்து யோசிக்கிற நிலைக்கு ஆளாகாதீர்கள்"



"பொய்கள் கூடியே நியாயம் பேசும்" இந்த பாடலை கேளுங்கள்.


தொடர்புடைய பதிவுகள் :


8 comments:

  1. பெண் பேசினால் சாதாரணம். ஆண் பேசினாலோ அது - சதா "ரணம்"

    அழகாகச் சொன்னீர்கள்.
    உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. வருகைக்கு, மறுமொழிக்கு.

      Delete
  2. பார்த்து சூதானம்மா (கவனம்மா)
    எது சரி? சூதானமா அல்லது சூதானம்மா? (நடுவில் 'ம்' உள்ளது)
    கவனமா அல்லது கவனம்மா? (நடுவில் 'ம்' உள்ளது).

    சென்னையில் பிறந்த வளர்ந்தாலும், ஒவ்வொரு கோடைக்கும் கிராமத்திர்க்கு செல்வோம். வக்காளி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிந்தபோது (எனக்கு விவரம் தெரிந்த பொது (!)) அந்த சொல்லை 10 வயது பசங்களும் பெரியவர்களிடம் பேசும் பொது சர்வ சாதரணமாக உபயோகப் படுத்தியது எனக்கு ஒரு பயங்கர culture shock தான்.

    பெரியவர்களும் சிரியவர்களிடம் அந்த சொல்லை உபயோகப் படுத்தியது கொடுமை. அப்பன் மகனிடம், மகன் அப்பனிடம் சகோதரிகள் தாயார் முன்பும் அந்த வக்காளியை உபயோக்பப்டுதியது எனக்கு அசிங்கமாக இருந்தது; ஆனால், அது ஒரு சர்வ சாதாரண வட்டார் வழக்கு!

    ReplyDelete
    Replies
    1. சிரியவர்கள் / சிறியவர்கள் என்பதே சரி.

      சில நேரங்களில் ம்,க் போன்ற எழுத்துக்களை உபயோகிப்பதில் தவறு ஏற்பட்டு விடுகிறது. ///

      சர்வ சாதாரணமாக இருக்கிற கெட்ட பழக்கங்கள் சரியானதாக ஆகிவிடுமா?

      Delete
  3. கெட்ட வார்த்தை என்பதை விட கண்ணியக்குறைவான வார்த்தை// அது பெண்களை பொறுத்தது நண்பரே. சில பெண்களுக்கு அவர்களது கணவர்கள் 'டி" போட்டு பேசுவது பிடிக்கிறது. உரிமையின் வெளிப்பாடாக இதைக் கருதும் பெண்களுக்கு இது எப்படி கண்ணியக்குறைவாகும்?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே. நானும் பார்த்திருக்கேன். கணவனை "டி" போட்டு பேச சொன்ன பெண்ணையும். ///

      ஆனால் பதிவு, அதை கண்ணியக்குறைவாக நினைக்கிற ஒரு பெண்ணை பற்றியது. வருகைக்கு நன்றி ராபர்ட்.

      Delete
  4. நன்றாக விளக்கி உள்ளீர்கள்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். வருகைக்கு, மறுமொழிக்கு.

      Delete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails